3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Wednesday, June 13, 2012

பாங்கு சொல்வதன் சிறப்புகள்

 அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே...

பாங்கு  சொல்வதன் சிறப்புகள்

 
அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள் :

"பாங்கு கூறுவதிலும் , (தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்து, பின்பு அதற்க்கு சீட்டுக்குலுக்கி போடாமல் அவர்கள் அதை அடைந்து கொள்ள முடியாது என்று இருந்தால் , அதற்காக சீட்டுக்குலுக்கிப் போட்டு அவ்விரண்டுக்கும் விரைந்து விடுவார்கள். மேலும், (தொழுகைக்கு) விரைந்து செல்வதில் உள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், அதன் பக்கம் முந்திச் செல்வார்கள். இஷாத் தொழுகையிலும், சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவ்விரண்டு தொழுகைக்கும் அவர்கள் வருவார்கள்." என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி : 615 , முஸ்லிம் : 437)

முஆவியா (ரழி) அறிவிக்கின்றார்கள் :

"முஅத்தின்கள் (பாங்கு கூறுபவர்கள்) மறுமை நாளில் (அவர்களைப் கண்ணியப்படுத்தும் பொருத்து) மக்களிலேயே கழுத்து நீண்டவர்களாக இருப்பார்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(முஸ்லிம் : 387)

அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார் :

அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் 'நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.
(புஹாரி :609)

அபூஸயீத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கின்றார்கள் :

"பாங்கை நீங்கள் கேட்டால் , பாங்கு கூறுபவர் போல் நீங்களும் கூறுங்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(புஹாரி : 611 , முஸ்லிம் : 383)

அனஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள் :

"பாங்குக்கும், இகாமத்திற்க்குமிடையே கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அபூதாவூது : 521 , திர்மிதீ : 212 (ஹசன் ஸஹிஹ்))

No comments:

Post a Comment

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...