3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Friday, September 30, 2011

தாயத்து தகடுகளில் பயன் இருப்பதாக நம்புதல்

சூனியம் மற்றும் ஜோஸியக்காரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தாயத்து தகடு தட்டு போன்ற அல்லாஹ்வுக்கு இணைவைக்க காரணமாகும் பொருட்களில் நிவாரணம் இருப்பதாக நம்மில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அதனை கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். கண்திருஷ்டி போன்றவைகளிலிருந்து பாதுகாப்புத் பெற அதனை அவர்களது குழந்தைகளின் கழுத்திலும் கட்டிவிடுகிறார்கள். உடலில் கட்டிக் கொள்கிறார்கள். வீடுகளிலும் கடைகளிலும் வாகனங்களிலும் தொங்க விடுகிறார்கள்.
 
துன்பம் மற்றும் சோதனைகளிலிருந்து விடுபட பாதுகாப்புப்பெற பல வடிவங்களில் மோதிரங்களை அணிந்து கொள்கின்றனர். நிச்சயமாக இவைஅனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாற்றமான கொள்கைகளாகும். தவறான இக்கொள்கைகள் ஈமானில் பலவீனத்தையே அதிகப்படுத்தும். இவைகளின் மூலம் நோய் நிவாரணம் தேடுவது ஹராம் ஆகும்.

நிவாரணத்திற்காக இவர்கள் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் தாயத்து தகடுகளில் பெரும்பாலானவை இணைவைக்கும் வாசகங்கள், ஜின் ஷைத்தான்களிடம் அடைக்கலம் தேடுதல், புரியாத வரைபடங்கள், விளங்கிக் கொள்ளமுடியாத வாசகங்கள் ஆகியவைகளைக் கொண்டதான் தயாரிக்கப்படுகின்றன.
 
மேலும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக ஓதவேண்டிய திருக்குர்ஆனில் சில வாசகங்களையும் சிலர் எழுதுகின்றனர். ஆனால் அதனுடன் ஷிர்க்கான வாசகங்களையும் கலந்து விடுகின்றனர். சில பாவிகள் திருக்குர்ஆனின் வசனங்களை அசுத்தத்தைக் கொண்டும் மாதவிடாயின் இரத்தத்தைக் கொண்டும்கூட எழுதுகின்றனர். எனவே தாயத்து தகடு தட்டு போன்றவற்றைக் கட்டுவதோ தொங்கவிடுவதோ ஹராமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)

தாயத்து தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகின்றவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான். அவன் அல்லாஹ்விடம் இப்பெரும் பாவத்திற்காகத் தவ்பாச் செய்யவில்லையெனில் அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டான். அவனுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிடும் மேலும் அவனுக்கு சொர்க்கம் ஹராமாகி நிரந்தர நரகவாதியாகிவிடுவான்.

செயலாற்றலுக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே எனினும் தாயத்து தட்டுகள் நன்மை-தீமைக்கு காரணமாக உள்ளன என்று சிலர் எண்ணுகின்றனர். இதுவும் ஒருவகையில் இணைவைத்தலேயாகும். ஏனெனில் நன்மை தீமைக்கு காரணமாக அல்லாஹ் ஆக்காததை இவர்கள் காரணமாக எண்ணுகிறார்கள்.

சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்

சூனியம் இறைநிராகரிப்புச் செயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ
அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)

وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى
சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)

1) நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

சூனியம் செய்பவர்களை கொலை செய்வதே மார்க்கத்தீர்ப்பாகும். சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.

குல்அவூது பிறப்பில் ஃபலக், குல்அவூது பிறப்பின் னாஸ் மற்றும் இவைபோன்ற சில திருமறை வசனங்களின் மூலம் -மார்க்கம் அனுமதித்த முறையில்- அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடக் கடமைப்பட்டவர்கள் ஷிர்க்கான, ஹராமான வழிகளில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

2) நிச்சயமாக ஜோஸியக்காரர்களும் குறிகாரார்களும் மகத்தான அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களாவார்கள்.

மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதபோது இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றார்கள். மூட நம்பிக்கையுடையவர்களிடம் பணம் பறிப்பதற்காக பலவழி முறைகளை கையாளுகிறார்கள். மண்ணில் கோடிட்டுப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பாத்திரத்தில் நீரூற்றிப் பார்ப்பது, வெற்றிலையில் மைதடவிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்த்து மறைவானவற்றைக் கூறுவது போன்ற பலவழிகளில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 முறை பொய்யுரைப்பார்கள். ஆனால் மதிமயங்கியவர்கள். அவர்கள் ஒரு முறை கூறிய உண்மையை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டி பொய்யுரைக்கும் அனைத்தையும் உண்மையென நம்பிவிடுகின்றனர். திருமணம், வியாபாரம் மற்றும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் இன்ப, துன்பங்கள் பற்றி கேட்பதற்காகவும், காணாமல்போன பொருட்களைத் திரும்பப் பெறவும் அவர்களிடம் செல்கிறார்கள்.

3) சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ

சூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)

இவர்களுக்கு மறைவான ஞானமெல்லாம் கிடையாது என்று தெரிந்து கொண்டே அவர்களை சோதிப்பதற்காகவோ அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவர்களிடம் செல்பவன் காஃபிராகி விடமாட்டான். எனினும் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً
யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)

அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

Wednesday, September 28, 2011

அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்



3:67. எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள்.

2:166. (தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டு விடும்.

2:167. (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: ‘நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்’. இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெரும் துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும் அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகின்றவர்களும் அல்லர்.

33:68. ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக’ (என்று) கூறுவர்)

33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்.

9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப் பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனையன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?’ எனக் கேட்பார்கள்; (அதற்கு) ‘அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்’ என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.

7:38. (அல்லாஹ்) கூறுவான்: ‘ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்’. ஒவ்வொரு கூட்டத்தாரும் நரகத்தில் நுழையும் போதெல்லாம், (தங்களுக்கு முன் அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தை அடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப் பற்றி, ‘எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையைக் கொடு’ என்று சொல்வார்கள். அவன் (அல்லாஹ்) கூறுவான்: உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு – ஆனால் நீங்கள் அதனை அறியமாட்டீர்கள்.

உலகை நீண்ட நாட்கள் வாழ்ந்து அனுபவிக்க ஆசையா ! ! !

அஸ்ஸலாமு  அலைக்கும் சகோதர சகோதரிகளே.....

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்....
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;

எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)

“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)

நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)

இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல் குர்ஆன் 21:34)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.

மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)

இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்” (அல் குர்ஆன் 41:30)

ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)

எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பது தெளிவாகிறது. உண்மையை உணர்ந்தபின் தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? அல்லாஹ் கூறுகிறான்:

‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்” (அல் குர்ஆன் 42:44) “


அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)

“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)

நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)

இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல் குர்ஆன் 21:34)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.
மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)

இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்” (அல் குர்ஆன் 41:30)

ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)

எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பது தெளிவாகிறது. உண்மையை உணர்ந்தபின் தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? அல்லாஹ் கூறுகிறான்:

‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்” (அல் குர்ஆன் 42:44)

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)

எனவே நாம் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாகவும்.

Saturday, September 24, 2011

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும் ! ! !



அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் ஆலு இம்ரான்3 :180)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்,அத் தவ்பா, 9:34)
அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். என்று கூறினார்கள்;. (ஹதீஸ் சுருக்கம்.புகாரி 7061)
மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்:
ஒரு மனிதனிடம் இன்னொருவர் வாங்கிய தொகையை தரவில்லை என்றால், எவ்வளவு கோபப்படுகிறான் அந்த மனிதன். ஆனால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கின்றி பெற்றுக்கொண்ட நாம் அவன் ஏவல் விலக்கள்களை ஏற்று நடக்கின்றோமா என்றால் இல்லை. ஆதனால் தான் வல்ல ரஹ்மான் இப்படிப்பட்ட குணமுடையவர்களை நன்றி கெட்டவர்கள் என்றும், இந்த நன்றி கெட்டத் தனத்திர்க்கு அவனே சாட்சியாக இருக்கின்றான் என்றும் கூறுகின்றான்.

إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
(அல்குர்ஆன்,அல்ஆதியாத்100:6,7,8)
தனக்கே கேடு:
கஞ்சத்தனம் செய்வதால் நம்முடைய செல்வம் நம்முடனேயே இருக்கும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அந்த செல்வமே தனக்கு கேடாக மறுமையில் நிற்கும் என்பதையும், பெரும் அழிவைத் தரும் என்பதையும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருப்பது சத்தியத்தை புரக்கனிக்கும் செயல் என்பதையும் நாம் சிந்திப்பதில்லை.

هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன், முஹம்மத்47:38)
நபி ஸல்லல்லாஹூஅலைஹிவசல்லம் கூறினார்கள்..
“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.”என அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.(நூல் புகாரி 5299)
கஞ்சத்தனம் செய்ய தூண்டுபவருக்கும் கேடு:
நம்மில் சிலர் இருக்கின்றார்கள், தானதர்மம் செய்பவர்களையும் கண்டிப்பதுடன், இப்படியெல்லாம் செலவு செய்தால் வருமை நிலைக்கு வந்துவிடுவாய் என அச்சுருத்தி, ஏதோ நன்மையான காரியம் செய்துவிட்டது போல் திருப்திபட்டுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் நாளை மறுமையில் நரக வேதனையுண்டு என அல்லாஹ் வண்மையாக கண்டிக்கின்றான்.

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا

அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி,  அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.   (அல்குர்ஆன், அந் நிஸா 4:37)

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

எவர்கள் கஞ்சத்தனம்; செய்து கஞ்சத்தனம்; செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ! எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறார்களோ!  – (இவர்களே நட்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன் .    (அல்குர்ஆன், அல்ஹதீத்57:24)
திடீரென வரும் அல்லாஹ்வின் தன்டணை:
பொருளாதாரம் நிறைந்திருக்கக்கூடியவர்கள், உல்லாச வாழ்கையையும், சுகபோக வாழ்கையையும் அனுபவிப்பதை பார்த்து நம்மில் பலர் பெருமூச்சு விடுவதை பார்க்கின்றோம். அல்லாஹ்வின் போதனைகளை, கட்டலைகளை மறந்து வாழ்கின்ற இப்படிப்பட்டவர்களுக்குத்தான், அல்லாஹ் செல்வவத்தின் வாசலை திறந்து விடுவதாக கூறுகின்றான். ஆனால், இவர்களின் இந்த உல்லாச வாழ்கையும், செல்வமும் நிரந்தரமானது அல்ல. மாராக அல்லாஹ்வின் தன்டணையைதான் கொண்டுவரும்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர் (அல்குர்ஆன்,அன்ஆம் 6:44)
மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்…

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

(அத்தகையவன் செல்வமே சதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் காக்கும்) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்றும் அவன் எண்ணுகிறான்.

كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

அது (உடலில் பட்டதும்) இருதயத்தில் பாயும்.
(அல்குர்ஆன்,ஸூரத்துல் ஹுமஜா 104: 2-7)
தயால குணம்:
ஜாபிர்(ரலி) கூறினார்கள்…நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தரவேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்” என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், ‘நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில் தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘எனக்கு அபூ பக்ர்(ரலி) கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, ‘இதை எண்ணிக் கொள்’ என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்த போது) அது ஐந்நூறு(திர்ஹம்) இருக்கக் கண்டேன். அபூ பக்ர்(ரலி), ‘இது போன்றதை இரண்டு முறை எடுத்துக் கொள்’ என்றார்கள்” என்று ஜாபிர்(ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்)அவர்கள், ‘கருமித் தனத்தை விட மோசமான நோய் உண்டா?’ என்றார்கள்.
கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்பு தேடல்:
நபி(ஸல்)அவர்கள்.. கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்… நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்;… நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என்னை (தம் வாகனத்தில்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கி விட்டிருந்த சிறுவனாக இருந்தேன். இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன்.
அப்போது அவர்கள், ‘இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன்.    (நூல் புகாரி 2893)
“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)
அல்லாஹ் கஞ்சத்தனத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

-சகோதரர்: M.S.ரஹ்மத்துல்லாஹ்

Wednesday, September 21, 2011

பின் புறத்தில் உடலுறவு கொள்வது

பலவீனமாக ஈமானுடைய சிலர் பெண்ணின் பின் புறத்தில் உடலுறவு கொள்வதை தவறாகக் கருதுவது கிடையாது. ஆனால் இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இந்தச் செயலில் ஈடுபடுவர்களை நபி(ஸல்)அவர்கள் சபித்து இவ்வாறு கூறினார்கள்.

பெண்ணின் பின்பகுதியில் உடலுறவு கொள்பவன் சாபத்திற்குரியவனாவான். (அறிவிப்பவர்: அபூஹரைரா(ரலி) நூல்: இப்னுமாஜா)

மாதவிடாய் நேரத்திலோ, பெண்ணின் பின்பகுதியிலோ உடலுறவு கொள்பவனும் ஜோஸியக்காரனிடம் செல்பவனும் முஹம்மது(ஸல்)அவர்களுக்கு இறக்கப்பட்ட -மார்க்கத்-தை நிராகரித்துவிட்டான். (அறிவிப்பவர்: அபூஹரைரா(ரலி) நூல்: இப்னுமாஜா)

மார்க்க சிந்தனையுள்ள பல பெண்கள் இந்த ஈனச்செயல்களுக்கு கட்டுப்பட மறுக்கின்றனர். அப்பெண்களை அவர்களின் கணவன், இதற்கு கட்டுப்படவில்லை எனில் உன்னை தலாக் விட்டுவிடுவேன் என மிரட்டுகின்றனர். மார்க்க கல்வியற்ற, அல்லது அறிஞர்களிடம் மார்க்க விளக்கங்களைக் கேட்க வெட்கப்படும் பெண்களை:

பெண்கள் உங்களுடைய விளை நிலமாவார்கள். எனவே நீங்கள் விரும்பியவாறு அவர்களிடம் செல்லுங்கள்! (அல்குர்ஆன் 2:223) என்ற வசனத்தைக் கூறி ஏமாற்றி இச்செயலுக்கு கட்டுப்பட வைக்கின்றனர்.

நபிமொழி, அல்குர்ஆனின் விரிவுரையாகும். பிறப்பு உறுப்பில் மட்டுமே விரும்பியவாறெல்லாம் உடலுறவு கொள்ள நபிமொழியில் அனுமதியுள்ளது. பின்பகுதி பிறப்பு உறுப்பல்ல மாறாக அது மலப்பாதை என்பது அனைவரும் அறிந்ததே! எனவே இரு தரப்பினரும் உடன்பட்டு இச்செயலில் ஈடுபட்டாலும் இது ஹராம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இரு தரப்பினரும் உடன்படுவது ஹராமை ஹலாலாக்கிவிடாது.

Tuesday, September 20, 2011

தெரிந்தோ தெரியாமலோ அல்லாஹ்விற்கு இணைவைப்பது....

அஸ்ஸலாமு  அலைக்கும் சகோதர சகோதரிகளே....

நல்லடியார்களின் கப்ர்களிலும், அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பல செயல்கள் நடக்கின்றன. அவற்றில் ஓரிறைக் கொள்கைக்கு முரணான சிலசெயல்களும் அவை தவறு என்பதற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) சிலர், இறந்துவிட்ட நபிமார்களிடமும் நல்லடியார்களிடமும் -அவ்லியாக்களிடமும்- தங்களின் தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர், பரிந்துரைக்க வேண்டுகின்றனர். துன்பங்களை நீக்கக் கோருகின்றனர், அவர்களிடம் உதவி, அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடுகின்றனர்.
பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!. அவனுக்கே உரிய இவ்வணக்கத்தை பிறருக்குச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ

(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِ

துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)

2) சிலர், சில பெரியார்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயர்களை நிற்கும் போதும், உட்காரும் போதும், கஷ்டத்தின் போதும் கூறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் ஒருவர்: யா முஹம்மத்! என்கிறார். மற்றொருவர்: யா அலீ! என்கிறார். மற்றொருவர்: யா ஹுஸைன்! என்கிறார். அவர்: யா பதவீ! என்கிறார். இவர்: யா ஜீலானி! யா முஹைதீன்! என்கிறார். அவர்: யா ஷாதலீ! என்கிறார். இவர்: யா ரிஃபாயீ! என்கிறார். அவர் ஐதுரூஸை அழைக்கிறார். இவர் ஸெய்யிதா ஜைனபை அழைக்கிறார். மற்றொருவர் இப்னு அல்வானை அழைக்கிறார்.

அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

3) கப்ரை வழிபடும் சிலர் அதனை வலம் வருகிறார்கள். அதன் மூலைகளை கையால் பூசி அதனை உடலில் தடவிக் கொள்கிறார்கள். அதன் மணலை முத்தமிடுகிறார்கள். முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். கப்ர்களைக் கண்டால் உடனே ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். மேலும் கப்ர்களுக்கு முன்னால் மிகவும் பயபக்தியுடனும் பணிவுடனும் சிரம் தாழ்ந்தவர்களாக, அச்ச உணர்வுடன் நின்று கொண்டு, நோயை நீக்க, குழந்தை கிடைக்க, தேவைகள் நிறைவேற மற்றும் இதுபோன்ற தன் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். என்னுடைய தலைவரே! நெடுந்தூரம் பயணம் செய்து உங்களிடம் வந்துள்ளேன். எனவே என்னை நஷ்டமடைந்தவனாக வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிடாதீர்! என்றுகூட சிலர் வேண்டுகிறார்கள். ஆனால்

அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)

4) சிலர் கப்ர்களுக்கு சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர். சிலர் கப்ர்களின் கண் கொள்ளாக்காட்சி, அவ்லியாக்களின் அபரிமித ஆற்றல் என்றெல்லாம் பல தலைப்புக்களில் கட்டுக் கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்கு மனாஸிக் ஹஜ்ஜில் மஷாஹித் -கண்கூடான ஹஜ் வழிபாடு- என்றும் பெயர் சூட்டியுள்ளனர். சிலர் அவ்லியாக்கள்தான் இவ்வுலகில் ஆட்சி செய்கிறார்கள் என்றும் துன்பம் தரவும் இன்பம் தரவும் அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)

Saturday, September 17, 2011

முஃமின்களே ! தாழ்த்திக் கொள்ளுங்கள் பார்வைகளை...

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 24:30)

நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள்:
கண்ணின் விபச்சாரம் -தவறானதைப்- பார்ப்பதாகும்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ)

திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர், மருத்துவத்திற்காக அன்னியப் பெண்ணைப் பார்ப்பது போன்ற மார்க்கத் தேவைக்காக, நிர்ப்பந்தத்திற்காக பார்ப்பது இதிலிருந்து விதிவிலக்குப் பெரும்.

இது போல் பெண்கள் அன்னிய ஆண்களைப் பார்ப்பதும் தவறாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல்குர்ஆன் 24:31)

ஒரு ஆணோ, பெண்ணோ தம் இனத்தைச் சேர்ந்த அழகானவர்களை இச்சையுடன் பார்ப்பது ஹராமாகும். மேலும் ஒரு ஆணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற ஆண் பார்ப்பதும், ஒரு பெண்ணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற பெண் பார்ப்பதும் ஹராமாகும். மறைக்கவேண்டிய எந்தப் பகுதியையும் பார்ப்பதோ, தொடுவதோ கூடாது -அது ஏதேனும் திரைக்குப் பின்னால் இருந்தாலும் சரியே!-.

பத்திரிக்கைகளில் வரும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் திரைப்படங்களின் மூலம் ஷைத்தான் பலரை இதுபோன்ற மானக்கேடான செயல்களில் ஈடுபடுத்துகிறான். நிச்சயமாக அவைகள் உண்மையானவைகள் அல்ல, மேலும் குழப்பத்திற்கும் இச்சையை தவறான முறையில் தீர்ப்பதற்கும் வழிவகுக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

புறம் இஸ்லாத்தில் ஹராம்

முஸ்லிம்கள் ஒன்றுகூடும் சபையில் புறம் பேசுவது, பிறரை இழிந்துரைப்பது போன்ற செயல்கள் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உள்ளங்கள் வெறுக்கும் அறுவருப்பான உவமையைக் கூறி இதனை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:


முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப் பொடுபோக்காக உள்ளனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)

சபையில் இருப்பவர் இத்தீமையிலிருந்து பிறரைத் தடுப்பது கடமையாகும். மேலும் புறம் பேசப்படும் சகோதரருக்கு சார்பாக நாம் பேசவேண்டும். இவ்வாறு பேசுவதை நபி(ஸல்)அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)

யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களையும் எங்களுடைய செயல்களில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்தருள்வாயாக! எங்களுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக!

நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்களின் மீதும் அருள்புரிவாயாக!

-அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்-

அல்லாஹ்விற்கு அடிபணிந்து பயந்த தலைவர் - உமர்(ரலி)

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.
 அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.
 ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.
 அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்
. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.
அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.
அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”
அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!
உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!
உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”
வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

Tuesday, September 13, 2011

இஸ்லாம் என்றால் ! !


இஸ்லாம் என்றால் ! !


(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் 'ஹஜ்' அல்லது 'உம்ரா'ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: "அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்" என அவர்களது(நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, "ஆனால், அவர்கள் 'விதி' என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்" என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறிவிடுங்கள்)".

பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயண அடையாளம் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் எவருக்கும் அவரை(யார் என)த் தெரியவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள் மீது வைத்துக் கொண்ட பிறகு, "முஹம்மதே! 'இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் உங்களுக்குச் சென்று வர இயலுமெனில் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "உண்மை உரைத்தீர்கள்" என்றார். கேள்வியும் கேட்டுவிட்டு பதிலை உறுதியும் படுத்துகிறாரே என்று அவரைக் குறித்து நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், "ஈமான்(இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்" என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மை உரைத்தீர்கள்" என்றார்.

அடுத்து அவர், "இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.

அவர், "எனக்குச் சொல்லுங்கள், யுக முடிவு எப்போது?" என்று மேலும் கேட்க, நபி(ஸல்) அவர்கள், "வினவுபவரைவிட வினவப் படுபவர் அறிந்தவர் அல்லர் என்று விடையளித்தார்கள். மேலும் அவர், "மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும் காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்திருந்த ஏழை ஆட்டு இடையர்கள், போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.

பிறகு அவர் சென்று விட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி(ஸல்) அவர்கள், "உமரே! கேள்வி கேட்டவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், "அவர்தாம் (வானவர்)'ஜிப்ரீல்'. உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்தார்" என்றுச் சொன்னார்கள்".

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

குறிப்பு: நபித் தோழர்களும் அவர்களுக்குப் பின்வந்தோரும் இந்த முதல் ஹதீஸில் இடம் பெற்றாலும் மூல நிகழ்வில் நேரடித் தொடர்புடையவரும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்ற நபித் தோழருமான உமர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதால் இதன் மூல அறிவிப்பாளரான உமர் (ரலி) அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் என இங்குக் குறிப்பிடப் படுகிறார்.

வாய்மையே வெல்லும் !


வாய்மையே வெல்லும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ

இஸ்லாம் 1400 வருட கால வரலாறுப் பயணத்தில் எழுச்சியையும் வளர்ச்சியையும் மட்டுமே கண்டு வருகிறது. தோல்வியும் வீழ்ச்சியும் இஸ்லாத்திற்கு முன் மண்டியிட்டது. தடைக் சுவறுகள் தவிடுபோடி ஆயின.
தனது கடவுள்? வாதத்தையும் ஆட்சி பீடத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்ரவேலர்களின் ஆண் இனத்தையே அழித்தான் ஃபிர்அவ்ன். ஆனால் அவனுடைய வீட்டிலேயே மூஸா (அலை) அவர்கள் செல்லப் பிள்ளையாக வளர்ந்த அர்ப்புத வரலாறுகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். (பார்க்க, அல்குர்ஆன் 28:1-14)
பயந்து, பயந்து முதியவர் ஒருவர் இஸ்லாத்தைப் போதித்தார். அரசவை குறி, ஜோஸியத்திற்காக தேர்ந்தெடுப்பட்ட சிறுவனை அவர் போதிக்கும் இஸ்லாம் கவர்ந்தது. இதை அறிந்த கொடுங்கோல் ஆட்சியாளன் அந்த முதியவரை சிறுவன் கண் எதிரே சாகடித்தான். அரசனுக்கும் சிறுவனுக்கும் கடும் போரட்டங்கள்! சிறுவனை கொலை செய்ய முடியாமல் அரசன் தவிக்கிறான். இறுதியில் அந்த சிறுவனின் ஆலோசனைப்படியே பொதுமக்களுக்கு மத்தியில் ‘இந்தச் சிறுவனின் இரட்சனின் பெயரால்’ என்று கூறி அம்பெய்து கொலைசெய்கிறான். சிறுவனை கொன்றுவிட்டோம்! என்று நிம்மதிப் பெரும் மூச்சி விடுவதற்கு முன்பே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ‘இந்த சிறுவனின் இரட்சகனாகி அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று இஸ்லாத்தை ஏற்றனர். பிரிந்தது ஒரு உயிர்தான்! ஆனால் அது ஒரு முஸ்லிம் சமுதாயத்தையே உருவாக்கிச் சென்றது. இவர்களின் தியாக வரலாறுகளைத்தான் ‘நெருப்புக் குன்ற வாசிகள்’ என அல்குர்ஆனின் 89வது அத்தியாயம் நினைவு கூறுகிறது. (பார்க்க, நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களை கொலை செய்யவந்த உமரை, நபிகளாரின் உயிர்காவலராக மாற்றியது இஸ்லாம்! நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட பாசம் அண்ணலாரின் மரணித்த தகவலைக் கூட தாங்கிக் கொள்ளமுடியாத பலவீனராக்கியது! அங்கே இஸ்லாத்தின் வீரியத்திற்கு முன்னர் உமரின் வீரம் தோற்றது.
பத்ர் களத்தை விட்டும் வணிகக் கூட்டத்துடன் சாமர்த்தியமாக தப்பித்த, அபூசுப்யான் ‘பத்ருக்கு பழி தீர்ப்பதற்காக பல முறை படைதிரட்டி வந்தார். உஹது நடந்தது, அஹ்ஸாப் நடந்தது. ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தது.
மக்கா வெற்றியின் போது, குரைஷித் தலைவர்களே சரணடைய வருகிறார்கள், என்ற ஆதங்கத்தில் இதோ ஆயிது இப்னு அம்ரும் அபூசுஃப்யானும் வருகிறார்கள்! என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த வருகையை விட இஸ்லாம் மிக கண்ணியமிக்கது! இஸ்லாம் மேலோங்கும்! தாழாது! என்றார்கள்! (நூல்கள்: தாரகுத்னீ, புகாரீ)
மக்கா வெற்றியின்போது ‘அபூசுஃப்யானின் வீட்டில் நுழைந்தவருக்கும் அடைக்களம்!’ என்று அறிவித்து அபூசுஃப்யான் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சிறப்பிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)
அபூசுஃப்யான் (ரலி) அவர்களை முஸ்லிம் கண்டு கொள்ளவோ, அமருமாறு கூறுவதோ கிடையாது, இந்நிலையில், அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருந்து நீங்கள் மூன்றை ஏற்றுக் கொள்ளவேண்டும்! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரி! ஏற்றுக் கொள்கிறேன் என்றார்கள். அரபு மக்களில் மிகவும் கவர்ச்சி மிக்க, அழகான என்னுடைய மகள் உம்மு ஹபீபாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்! என்றார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவதாக, என்னுடைய மகன் முஆவியாவை உங்களுடைய எழுத்தாளனாக நியமிக்கின்றேன்! என்றார்கள். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். மூன்றாவதாக, நான் முஸ்லிம்களை எதிர்த்து யுத்தம் செய்தது போன்று இறை நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட என்னை படைத் தளபதியாக்க வேண்டும்! என்றார்கள். அதையும் நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் மறுக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுமைல் அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் -ரலி, நூல்: முஸ்லிம்)
மக்கா வெற்றியின்போது, அபூசுஃப்யானையும் அவர்களின் சஹாக்களான குரைஷிகளையும் பழிவாங்க வேண்டும் என முறையிட முனைந்தேன். ‘உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை! அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன் (அல்குர்ஆன் 12:92) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் அதிர்ச்சியால் மௌனமானேன் என்றார்கள் உமர் (ரலி).
சமூக வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு! எனவே நம்முடைய நடவடிக்கைகளை படிப்பினை தரும் வரலாறாக மாற்றவேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை அதன் சேவகர்களாக மாற்றியமைத்த வரலாறு கண்டோம். வாய்மையான நடத்தைகளால் மனித உள்ளங்களை வெல்வோமாக!

எம். முஜீபுர்ரஹ்மான் உமரீ M.A.
வெளியீடு: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்

சகுனம் இல்லை நற்குறி உண்டு

சகுனம் இல்லை நற்குறி உண்டு.

எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
1437. நபி (ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :5776 அனஸ் (ரலி).
1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5754 அபூஹூரைரா (ரலி).

1439. தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5753 இப்னு உமர் (ரலி).

1440. அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2859 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) .

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


அடக்கம் செய்யப்படுகின்ற ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு உண்டு என்பதை எல்லோரும் அறிந்து வைத்துள்ளோம். அப்படியானால் தகனம் செய்யப்பட்டு (எரிக்கப்பட்டு) சாம்பலை கடலில் கரைத்து விடக் கூடிய ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு வேதனை இல்லையா? என்ற கேள்வியை பலரும் கேட்பதுண்டு.
அதுபோல் கடலில் அல்லது ஆற்றில் மூழ்கி மீன்களுக்கு இரையாகிப் போன மையத்துகளுக்கும் குண்டு வெடிப்பில் சிதைந்து போன மையத்துக்ளுக்கும் இது போன்ற நிலையில் உள்ள மையத்துக்களுக்கும் கேள்வி கணக்கு உண்டா? வேதனை உண்டா? என்றும் கேட்கின்றனர். அல்லாஹ்வின் வல்லமையை தெரிந்து கொண்டால் இதற்கான பதிலும் கிடைத்துவிடும்.
அல்லாஹ் மனிதனை (படைப்பினங்களை) படைக்கும்போது எந்த முன்மாதிரியுமின்றி அவன் நினைத்த மாதிரி படைத்தான். ஒரு துளி நீரிலிருந்துதான் மனிதனை படைத்தான். அல்லாஹ் ஏதாவது ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகுக’ என்று கூறிவிடுவான். அது உடனே (ஒரு படைப்பாக) ஆகிவிடும். இப்படியான வல்லமை படைத்த அல்லாஹ்வுக்கு, தகனம் செய்யப்பட்ட கருகி சாம்பலாகிப் போன சிதைந்துப் போன உடல்களை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாதா? கேள்வி கேட்க முடியாதா? ஆற்றலும் வல்லமையுமுள்ள அல்லாஹ்வுக்கு இது மிகவும் இலகுவான காரியம். பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஹதீஸையும் நிதானமாக படியுங்கள். சந்தேகத்திற்கு தெளிவான பதில் கிடைக்கும்.
“மனிதனை (ஒரு துளி) விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில் லையா? (இப்போது) அவனோ நம்மை மறு த்து) பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.
அவன் நமக்கு (ஒரு) உதாரணம் காட்டுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.
“முதல் தடவை இதை யார் படைத்தா னோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று நபியே நீர் கூறுவீராக. (36:77-79)
நபி (ஸல்) அவர்கள் முன்சென்ற அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தையையும் வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதில் கூறினர். அவர் தமக்காக எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை.
அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். ஆகவே (அவர் தம் மக்களிடம்) நன்றாக கவனியுங்கள். நான் இறந்து விட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். (தகனம் செய்து விடுங்கள்) நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் பொடிப் பொடியாக்கிவிடுங்கள். அல்லது துகள் துகளாக்கி விடுங்கள். பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவி விடுங்கள் என்று கூறி தாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் உறுதி மொழியும் வாங்கிக் கொண்டான்.
என் இறைவன் மீதாணையாக! அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ், (தூவி விடப்பட்ட சாம்பலை) ஒன்று சேர்த்து மனிதனாக) ஆகிவிடு என்று கூறினான். உடனே அவர் மனிதராக (உயிர் பெற்று) எழுந்து நின்றார். அவரிடம் அல்லாஹ் என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது என்று பதிலளித்தார். ஆகவே அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். அருள் புரிந்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) ஹுபைதா (ரலி) நூல்: புகாரி (3478, 3479, 3481, 6480, 6481)

அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது


ஸஹீஹுல் புகாரி:4340.

அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்களின் மீது அவர் கோபமுற்று, 'நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம் (கட்டளையிட்டார்கள்)" என்று பதிலளித்தனர். அவர், 'அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்" என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், 'நெருப்பு மூட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், 'இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்" என்று கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும், அவர்கள், '(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்" என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும் வரை இவ்வாறே கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, 'அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில் தான்" என்று கூறினார்கள். 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புஹாரி 7144. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
 

(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
Volume :7 Book :93

அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா? பிரேதப் பரிசோதனை செய்யலாமா? பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டலாமா?

அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


மருத்துவப் பரிசோதனை கருதி அடக்கம் செய்யப்பட்ட உடலை (மையத்தை) வெளியில் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறான நிர்ப்ந்தமான சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கு தடையேதும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

(முனாபிக்குகளின் தலைவரான) அப்துல்லாஹ் இப்னு உபையின் உடல் கப்ருக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் அ(ந்த மையத்)தை வெளியில் எடுக்குமாறு கூறினார்கள். வெளியில் எடுக்கப்பட்டதும் அதை தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ் நீரை உமிழ்ந்து தமது மேலாடையையும் அதற்கு அணிவித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி (1350)

(‘உஹது யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட) எனது தந்தையுடன் இன்னொருவர் (ஒரே குழியில்) அடக்கம் செய்யப்பட்டார். ஆயினும் எனது மனம் அதை விரும்பில்லை. எனவே, ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது உடலை வெளியிலெடுத்து அதைத் தனி கப்ரில் அடக்கம் செய்தேன். அப்போது அன்றுதான் அடக்கம் செய்யப்பட்டவர் போல அவரது உடல் (பாதிப்பில்லாமல்) இருந்தது. காதைத் தவிர (காது பழுதுபட்டிருந்தது) என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (1351,1352)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” என கூறுவோம். யாருடைய மையத்தாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.
இஸ்லாத்தின் பார்வையில் இதில் தடையிருப்பதாக தெரியவில்லை. “யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸை காரணம் காட்டி தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.
யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபி மானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச் சூழலில் பிரேதப் பரிசோதனைக்காக மையத்தின் உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோனை செய்வது என்பது வீணாக உறுப்புக்களை வெட்டி வீசுவதற்கல்ல.
இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை முறை தேவையில்லை என்றும் அது மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். சிலநேரம் மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த விடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும்தவறாகும்.
இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.
பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்துக் கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.
இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸிஸேரியன்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள். இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகளை மனிதனின் நலன் கருதி செய்யப்படுகிறன.
நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும்போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பது தவறான வாதமாகும்.

பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


மையத்தை குளிப்பாட்டுவது அதனது அசுத்தங்களை நீக்கி சுத்தப் படுத்துவதற்காகத்தான். ஆனால், பிரேதப் பரிசோதனைக்கு உட்பட்ட மையத்தை குளிப்பாட்டும்போது மேலும் அசுத்தங்கள் ஏற்படுவதற்கோ, இரத்தங்கள் வடிந்து ஓடுவதற்கோ வாய்ப்புண்டு. அதன் காரணமாக கபன் ஆடை கூட அசுத்தமாகி விடலாம். எனவே இப்படியான சந்தர்ப்பத்தில் அந்த மையத்தை குளிப்பாட்டுவதற்கு பதிலாக தயம்மும் செய்துவிடுவதே சிறந்த செயலாக இருக்கும்.
உயிரோடு இருக்கும்போது குளிக்க முடியாத அளவுக்கு காயம் அல்லது வேறு காரணங்கள் இருந்தால் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்யுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது. அதுபோல் இறந்த உடலும் (மையத்தும்) குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் தயம்மும் செய்து கொள்வதே சிறந்த வழிமுறையாகும்.
இதுபோல் விபத்தில் இறந்தவர்கள், உடல் சிதைந்து இறந்தவர்கள் தீயில் கருகி இறந்தவர்கள், ஆகியோர்களது உடல்களை பிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அப்போது குளிப்பாட்டாமலோ தயம்மும் செய்யாமலோ விட்டுவிட வேண்டியிருக்கும். சிலநேரம் மையத்துக்களை அரசாங்கம் “சீல் குத்தி” தரும். அந்த மையத்தை யாரும் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது மாதிரியான சூழ்நிலையில் குளிப்பாட்டாமலும் தயம்மும் செய்யாமலும் விடுவதால் குற்றமாகாது.
“உங்களுக்கு நான் ஒரு கட்டளையிட்டிருந்தால் அதனை உங்களால் முடிந்தவரைச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக் கேற்ப நம்மால் முடியாத காரியத்தில் இவ்வாறு செய்வதால் அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான்.

பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

அசலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே...

மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை!
பித்அத்துக்கள், அதைச் செய்வோரை நரகத்தை நோக்கியே இழுத்துச் செல்லும். மார்க்கத்தின் பெயரால் உருவான இத்தகைய ஆபத்தான பித்அத்துக்கள் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூண்றியுள்ளன. இவை வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டியவை ஆகும்.
பித்அத்துக்களைக் களைய வேண்டுமென்றால், பித்அத்துக்கள் தோன்றி வளர்ந்து வருவதற்கான காரணங்களையும் கண்டறிந்து களைவது கட்டாயமாகும்.
இந்த அடிப்படையில் பித்அத் துக்கள் தோன்றி வளர்ந்து வருவதற்கான காரணங்கள் எவையென்பது இங்கே ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்படுகின்றது.
-1- அறியாமை:
“அறியாமை” ஆபத்தான அம்சமாகும். பல தீமைகளை அறியாமை நன்மைகளாகக் காட்டி விடுகின்றது. அறிவீனர்களை ஆலிம்களாக்கி விடுகின்றது.
ஆலிம்களாக இனங்காணப்பட்ட அறிவீனர்களின் ஆதாரமற்ற உளறல்கள் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட ‘ஃபத்வா”க்கள் ஆகிவிடுகின்றன.
“உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (17:36)
தனக்கு அறிவற்ற விடயங்கள் குறித்துப் பேசுவதை இஸ்லாம் கண்டிக்கின்றது. இன்று சாதாரண மார்க்க ஈடுபாடு ஏற்பட்டு விட்டால் அவர்களெல்லாம் ‘ஃபத்வா”க் கொடுக்கும் “முஃப்தி”களாகி விடுகின்றார்கள்.
நிச்சயமாக அல்லாஹ்தஆலா கல்வியை மக்களிடமிருந்து ஒரேயடியாகப் பிடுங்கி எடுத்து விட மாட்டான். எனினும், உலமாக்களைக் கைப்பற்றுவான். அவர்களுடன் மார்க்க அறிவும் உயர்த்தப்படும். அதன் பின் மனிதர்கள் மத்தியில் அறிவீனமான தலைவர்கள்தான் மிஞ்சுவார்கள். அவர்கள் (மார்க்க) அறிவில்லாமல் ஃபத்வா வழங்கித் தாமும் வழிகெடுவதுடன், பிறரையும் வழிகெடுத்து விடுவார்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூற, தான் செவியுற்றதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 7307, முஸ்லிம் 2673)
இந்த நிலையை இன்றைய இஸ்லாமிய அமைப்புகள் பலவற்றிலும் நாம் காணக் கூடியதாக உள்ளது. மார்க்கத்தைக் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் கற்றறிந்த உலமாக்களை விட 3 நாள், 40 நாள் ஜமாஅத்தில் சென்றவர்கள் அல்லது 4 மாநாடுகளில் கலந்து கொண்டு, 10-11 (CD) இறுவட்டுகளைக் கேட்டவர்களெல்லாம் தலைவர்களாகவும், மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்களாகவும், மார்க்கத்தின் பெயரில் மார்க்கத்தில் இல்லாதவற்றையும், மார்க்கத்தில் இருப்பவற்றைக் கூட்டிக் குறைத்தும், திரித்தும் தீர்ப்பு வழங்கி விடுகின்றனர். இதனால் அவர்களும் வழிகெடுகின்றனர்; பிறரையும் மார்க்கத்தின் பெயராலேயே வழிகெடுத்து விடுகின்றனர்.
அறிவீனர்களைத் தலைவர்களாக எடுத்துக்கொள்ளும் விடயத்தில் பொது மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். பொது மக்கள் மட்டுமன்றி, உலமாக்கள் கூடத் தீர்ப்பு வழங்கும் விஷயத்தில் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் ஆதாரங்களை அறிந்து, அலசி ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லும் பக்குவத்தைப் பெறவேண்டும்.
இல்லாத போது பித்அத்தை ஒழிக்க முடியாது! ஒரு பித்அத்திலிருந்து விடுபட்டு, இன்னுமொரு பித்அத்தில் விழும் நிலைதான் தொடர்ந்துகொண்டிருக்கும்.
-2- மனோ இச்சைகளைப் பின்பற்றுதல்:
மனம் விரும்புவதை மார்க்கமாகவும், மார்க்கச் சட்டமாகவும் எடுத்துக்கொள்வது பித்அத் தோன்றவும், வளரவும் வாய்ப்பை உண்டாக்கியுள்ளது. இத்தகையவர்களுக்கு எத்தனை ஆதாரத்தைக் காட்டினாலும், அவர்களது மனம் அதை ஏற்றுக்கொள்ளாததால் ஆதாரத்திற்குக் கட்டுப்பட மாட்டார்கள். இத்தகையவர்கள் பித்அத்தை விட்டும் கழன்று வர மாட்டார்கள்.
மனோ இச்சைக்குக் கட்டுப்படும் இத்தகையவர்கள் சில போது நடைமுறை ரீதியான பித்அத்துக்களை விட்டு விலகினாலும், கொள்கை ரீதியான பித்அத்துக்களை விட்டும் இவர்கள் விலக முடியாதவாறு இவர்களது மனோ இச்சை இவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டேயிருக்கும். இத்தகையவர்கள் ஆதாரபூர்வமான ஸுன்னாவையோ, அல்குர்ஆனையோ வழிகாட்டிகளாக வாயால் ஏற்றிருந்தாலும் உள்ளத்தால் தமது மனோ இச்சையையே வழிகாட்டியாக ஏற்றிருப்பர். இது இழிவான நிலையாகும்.
இவர்களது மனம் “சரி!” என்று சொல்வது இவர்களுக்குச் சரி. அது ஸுன்னாவுக்கு முரணாக இருந்தாலும் சரியே!
இவர்களது மனம் “பிழை!” என்று சொல்வது இவர்களுக்குப் பிழையானதே. அது ஸுன்னாவுக்கு உடன்பாடாக இருந்தாலும் சரிதான்!
இந்த மனோ நிலையிலிருப்பவர்கள் ஆதாரங்களை விடத் தமது மனோ இச்சைக்கே முன்னுரிமை அளிப்பர். இது விடயத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிவுள்ளோரும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் போது வழிகேட்டில் விழ வாய்ப்புள்ளது. ஒருவரின் அறிவு மட்டும் அவர் போகும் வழி சரி என்பதற்கு ஆதாரமாக அமைந்து விடாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
“(நபியே!) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். மேலும், அவனது செவிப் புலனிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தினான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார்? நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?” (45:23)
மேற்படி வசனத்திலுள்ள அறிவு உள்ள, ஆனால் செவியிலும், விழியிலும், உள்ளத்திலும் சீல் குத்தப்பட்டவன் வழிகேட்டில் சென்று விடுவானென்ற அம்சம் அவதானிக்கத் தக்கதாகும்.
நல்ல மனிதர் கூட மனோ இச்சையைப் பின்பற்றி அல்லது தனது கோபம், பொறாமை, பழி வாங்கல், மட்டந்தட்டல், கர்வம் போன்ற தனது உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டுத் தீர்ப்பு வழங்கும் போது தவறி விடுவான்.
“தாவூதே! நிச்சயமாக உம்மை நாம் பூமியில் அதிகாரத் துக்குரியவராக ஆக்கினோம். எனவே, மனிதர்களுக் கிடையில் நீதியாகத் தீர்ப்பு வழங்குவீராக! மேலும், நீர் மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம்! அவ்வாறெனில், அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழி தவறச் செய்து விடும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி தவறுகின்றனரோ, அவர்கள் விசாரணைக்குரிய நாளை மறந்ததன் காரணமாக அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.” (38:26)
மேற்படி வசனத்தில், தாவூத் நபியைப் பார்த்து “மனோ இச்சைக்குக் கட்டுப்படாதீர்! அப்படிக் கட்டுப்பட்டால் நீரும் வழிகெட்டு விடுவீர்!” எனக் கூறப்படுவதை அவதானித்தால் மனோ இச்சைக்குக் கட்டுப்படுபவன் எவ்வளவு பெரிய ஆலிமாக இருந்தாலும் வழிகெட்டு விடுவான் என்பதை அறியலாம்.
“அவர்கள் உமக்குப் பதிலளிக்க வில்லையென்றால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்துகொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து எவ்வித வழிகாட்டலுமின்றித் தனது மனோ இச்சையைப் பின்பற்றுபவனை விட மிகப் பெரிய வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரர்களான கூட்டத் தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (28:50)
ஆதாரம் இல்லாமல் மனோ இச்சையைப் பின்பற்றுபவன் மிகப் பெரிய வழிகேடன் எனக் கூறப்படுவதால், இது விடயத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து பித்அத்தை ஒழிக்க முயல வேண்டும்.
-3- சந்தேகத்திற்குரியவற்றைப் பின்பற்றுதல்:
அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஸுன்னாவும் சந்தேகத்திற்கப்பாற்பட்டதாகும். அதே வேளை, குர்ஆனில் நேரடியாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ள விடயங்களை விட்டு விட்டு, பல கருத்துகளுக்கு இடம் பாடுள்ள முதஷாபிஹாத்தான விடயங் களைத் தப்பும், தவறுமாக விளங்கிப் பின்பற்றுவதும் பித்அத்தில் விழ வைக்கும்.
“அவன்தான் உம்மீது இவ்வே தத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) “முஹ்கமாத்” வச னங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத் தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) “முதஷாபி ஹாத்”களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை நாடியும், இதன் (தவறான) விளக்கத்தைத் தேடியும் அதில் பல கருத்துக்களுக்கு இடம்பாடானவற்றைப் பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார் கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ, “நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிட மிருந்துள்ளவையே!” என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.” (3:7)
உள்ளத்தில் நோய் உள்ளவர்கள் சந்தேகத்திற்குரியவற்றையும், பல அர்த்தங்களுக்கு இடம்பாடான வசனங்களையும் பின்பற்றி பித்அத்துகளை உருவாக்குகின்றனர்.
“யகீன்” என்ற சொல்லுக்கு மரணம் என்ற அர்த்தமும் உள்ளது;
“(மரணம் எனும்) உறுதி எமக்கு வரும் வரை நாம் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக்கொண்டு மிருந்தோம்” (எனக் கூறுவார்கள்.)” (74:46-47).
உறுதி என்ற அர்த்தமும் உள்ளது.
“அவ்வாறன்று, மிக நன்றாக நீங்கள் அறிவீர்களாயின் (உங்களை அது பராக்காக்கியிருக்காது) நிச்சயமாக, நீங்கள் நரகத் தைக் காண்பீர்கள்.” (102:5-6)
உள்ளத்தில் நோயுள்ளவர்கள் தெளிவான குர்ஆனின் வசனங்களையும், ஹதீஸ்களையும் உதறித் தள்ளி விட்டு, “யகீன் வரும் வரை உமது இறைவனுக்கு இபாதத் செய்!” என்ற வசனத்திற்கு உறுதி வரும் வரைதான் இபாதத் செய்ய வேண்டும். உறுதி வந்த பின்னர் இபாதத் தேவையில்லை எனக் கூறி தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகளைப் புறக்கணித்து வருகின்றனர்.
நோன்பு என்றால் உண்ணவோ, பருகவோ கூடாதென்பது தெளிவாக இருக்கும் போது, மரியம்(அலை) அவர்களின் மௌனவிரதம் சம்பந்தப்பட்ட (19:26-33) வசனங்களை வைத்து உண்டுகொண்டும், பருகிக்கொண்டும் நோன்பிருக்கலாம் என்கின்றனர்.
“உண்மையான முஃமின்களிடம் அல்லாஹ் நினைவூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுநடுங்கிவிடும்” என்ற வசனத்தை வைத்துக் கொண்டு ஆடி-அசைந்து கொண்டு “திக்ர்” என்ற பெயரில் கூத்தையுண்டாக்கினர். இவர்கள் தெளிவான சான்றுகளை விட்டு விட்டு, குழப்பும் நோக்கத்தில் தப்பான அர்த்தங்களைக் கூறி வழிதவறிச் செல்லும் கூட்டத்தினராவர்.
குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ் களுக்கும் அவை கூற வராத புதிய கருத்துகளைக் கூறி, குர்ஆன்-ஸுன்னாவின் கருத்தைத் திரிபுபடுத்துவது மிகப் பெரிய வழிகேடாகும். இந்த வழிகேடுதான் இன்று வரை புதிய புதிய பித்அத்தான கொள்கைகளையும், கூட்டங்களையும் உருவாக்கி வருகின்றது.
-4- பகுத்தறிவில் தங்கி நிற்பது:
குர்ஆன்-ஸுன்னாவை விட்டு விட்டு, பகுத்தறிவில் தங்கி நிற்பதும் பித்அத் தோன்ற வழிவகுக்கின்றது.

கூட்டு துஆ நல்லது தானே?
மவ்லிது நல்லது தானே? என்று எல்லா வகையான பித்அத்துகளையும் ஆதாரங்களைப் பார்க்காது, வெறும் அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சரிகண்டு விடுகின்றனர்.
இது வழிகேட்டுக்கு வழிவகுக்கின்றது; வழிகேடுகளை வளர்க்கின்றது.
“..இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ, அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ, (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.” (59:7)
ரசூல் தந்ததை எடுத்துக்கொள்ள வேண்டும். ரசூல் தந்ததை மறுப்பது வழிகேடு. தராததை நாமாக உருவாக்குவதும் வழிகேடாகும்.
“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவு செய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான்.” (33:36)
எனவே, இந்த வழிகேட்டை ஒழித்தால்தான் பித்அத்தை ஒழிக்க முடியும்.
-5- தக்லீதும், இயக்கஃதனிநபர் வழிபாடும்:
சிலர் சில இமாம்கள் மீதும், தனிநபர்கள் மீதும் அளவுக்கு மீறிய பற்று வைத்து, அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதென்ற தக்லீத் (கண்மூடிப் பின்பற்றும்) இயல்பில் இருக்கின்றனர். சிலர் சில இயக்கங்கள் மீது தக்லீத் பற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த இயக்கம் சொன்னால் நாம் சரி காண்போம் என்பது இவர்களது நிலை!
மற்றும் சிலர், “இந்த மத்ஹப் சொன்னால் ஏற்போம்! இல்லையென்றால் மறுப்போம்!” என்ற மனநிலையில் உள்ளனர். மற்றும் சிலர் மத்ஹபு மாயையிலிருந்து விடுபட்டு, அதை விட மோசமான தனிநபர் வழிபாட்டில் வீழ்ந்துள்ளனர்.
இவையனைத்தும் பித்அத்துக்களை வளர்க்கும் அம்சங்களாகவே திகழ்கின்றன.
“அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் நாளில், “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? மேலும், இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கூறுவார்கள். மேலும், “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” என்று கூறுவர். “எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கு வழங்குவாயாக! இன்னும் அவர்களை நீ பெருமளவில் சபிப்பாயாக!” (என்றும் கூறுவர்.)” (33:66-68)
முதலில் இந்த மாயைகள் அனைத்திலிருந்தும் நாம் விடுபட வேண்டும். ஒன்றிலிருந்து தப்பி, மற்றதில் விழுந்தால் கூட நரகிலிருந்து எங்களால் தப்ப முடியாது.
மற்றும் சிலர், “எமது மூதாதையர்கள் செய்தவற்றை நாம் விட மாட்டோம்!” என முரட்டுத்தனமாக விடாப்பிடியாக நிற்கின்றனர். இந்தச் சிந்தனையும் பித்அத் வளரக் காரணமாகி விடுகின்றது. ஆரம்ப கால இறைத் தூதர்கள் அனைவரது சத்திய அழைப்பும் இந்தப் போலிச் சாட்டுச் சொல்லைப் பயன்படுத்தித்தான் நிராகரிக்கப்பட்டது.
“அவ்வாறன்று, “நிச்சயமாக நாம் எமது மூதாதையர்களை ஒரு வழியில் இருக்கக் கண்டோம். நிச்சயமாக நாம் அவர்களது அடிச்சுவடுகளில்; செல் பவர்களே!” என்றும் கூறுகின்றனர்.” (43:22)
“அவர்களிடம் “அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள்!” என்று கூறப்பட்டால், “இல்லை! நாம் நமது மூதாதையர்கள் எதில் இருக்கக் கண்டோமோ, அதையே பின்பற்றுவோம்!” எனக் கூறு கின்றனர். அவர்களின் மூதாதையர்கள் எதையும் விளங்கிக் கொள்ளாதவர்களாகவும், நேர்வழி பெறாத வர்களாகவும் இருந்தாலுமா (பின் பற்றுவார்கள்)?” (2:170)
எனவே, தவறான மூதாதையர் பற்றிலிருந்து விடுபட வேண்டும்.
இதே வேளை, பித்அத் செய்வோர் தமது செயலை அழகாகக் காண்கின்றனர். மவ்லீது-மீலாது நிகழ்ச்சிகள் எவ்வளவு அழகானவை? அன்னதானம் வழங்குவது எவ்வளவு நல்ல செயல்? என்றெல்லாம் தமது பித்அத்துகளை அழகாகக் காண ஆரம்பித்து விடுகின்றனர்.
“யாருக்கு அவனது தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டு, அவனும் அதனை அழகானதாகக் கண்டானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போன்றவனா?) நிச்சயமாக அல்லாஹ், தான் நாடு வோரை வழிகேட்டில் விட்டு விடுகின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். எனவே, (நபியே!) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய் விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன் கறிந்தவன்.” (35:8)
என்ற வசனம் கவனத்திற்கொள்ளத் தக்கதாகும். இத்தகையவர்கள் நன்மை செய்கின்றோம் என்ற எண்ணத்தில் பித்அத்துகளைச் செய்து நாளை மறுமையில் நஷ்டமடைந்து விடுவார்கள்.
இந்த நிலை எம்மில் எவருக்கும் ஏற்படக் கூடாதென்றால் தனிநபர் வழிபாடு, இயக்க வெறி, போலி மூதாதையர் பற்று என்பவற்றைக் களைந்து தூய்மையான முறையில் குர்ஆன்-ஸுன்னாவை அணுக முற்பட வேண்டும்.
-6- பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாகக்கொள்வது:
ஹதீஸ் கலை அறிஞர்கள் சில ஹதீஸ்களைப் “பலவீனமானவை” எனறும், மற்றும் சிலவற்றை “இட்டுக்கட்டப்பட்டவை” என்றும் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஆய்வு செய்து அடையாளப் படுத்தியுள்ளனர். அவர்களது தியாகங்கள் அனைத்தையும் காலுக்குக் கீழ் போட்டு மிதிக்கும் விதத்தில் இன்றைய அறிஞர்கள் சிலர் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி மிம்பர்களில் கூறுகின்றனர்.
ஸஹீஹான உண்மையான ஹதீஸ்களையும், போலி ஹதீஸ்களையும் ஒன்றுடன் மற்றதைக் கலக்கின்றனர். மற்றும் சிலர், தமது போலியான ஹதீஸுக்கு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிக்கவும் தயங்குவதில்லை.
அல்லாஹ்வின் தூதர் மீது இட்டுக் கட்டப்பட்ட போலி ஹதீஸ்களை அடிப்படை யாகக் கொண்டு செயற்படும் போது பித்அத்துகள் உண்டாகின்றன.
மற்றும் சிலர், பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு செயற்படலாம் என்ற தவறான கருத்தால் பித்அத்துகளை உண்டாக்கி வருகின்றனர்.
இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் பித்அத்துகள் தோன்றவும், வளரவும் வழி வகுத்துள்ளன. எனவே, நாம் ஸஹீஹான ஹதீஸ்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
போலி ஹதீஸ்கள் புறக் கணிக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் பித்அத்து களை ஒழிப்பதென்பது சாத்தியமற்றதாகி விடும்.
-7- அந்நியருக்கு ஒப்பாக நடத்தலும், அவர்களைப் பின்பற்றுதலும்:
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறு ஏவப்பட்ட முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செய்வது போன்று செய்கின்றனர். அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். இதுவும் பித்அத் தோன்றவும், வளரவும் காரணமாக அமைகின்றது.
கிறிஸ்தவச் சகோதரர்கள் இயேசு பிறந்த தினத்தைக் “கிறிஸ்மஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இதைப் பார்த்த முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, நாம் முஹம்மத்(ஸல்) அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடாது இருக்கலாமா? எனச் சிந்தித்து “மீலாது-மவ்லித் விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் மார்க்க நடைமுறைகளில் தென்னிந்திய முஸ்லிம்களின் தாக்கம் அதிகமாகும்.
தென்னிந்திய முஸ்லிம்கள் இந்து சமூகத்தின் மார்க்க நடைமுறைகளை அவதானித்தனர். பொழுது போக்கிற்காகவும், கலை ஆர்வத்திலும் அவர்கள் செய்த அனைத்தும் இவர்களும் சில அறபுப் பெயர்களைச் சூட்டிச் சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்தனர்.
அவற்றுக்கு இஸ்லாமிய சாயமும் பூசினர். முஸ்லிம்கள் கோயில்களுக்கும், இந்து மத வழிபாடு நடக்கும் இடங்களுக்குச் சென்று விடாமலிருப்பதற்காக இவற்றை உருவாக்கியதாகக் காரணமும் கூறிக் கொண்டனர்.
ஆனால், இன்று இஸ்லாத்திற்கு முரணான இந்து சமயத் தாக்கத்தின் காரணத்தால் தோற்றுவிக்கப்பட்ட சடங்கு-சம்பிரதாயங்களை அகற்றுவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது.
ஒரு கவிஞன் கூறும் போது;
“சடங்கு-சம்பிரதாயங்கள் சட்டைகளாகவே சமூகத்தில் அணியப் பட்டன! காலப்போக்கில் அவை அட்டைகளாக மாறி, இரத்தம் குடிக்கக் கற்றுக் கொண்டன!” என்று கூறிய கூற்று சமூகத்தின் நிதர்சன நிலையாகி விட்டது.
அந்நியர்களைப் பின்பற்றுவது எமது சிந்தனையிலும், நடத்தையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே, இது குறித்து நாம் விழிப்பாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அபூவாகித் அல்லைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள். (நாம் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2180)
மேற்படி வசனமும், ஹதீஸும் அந்நியர்களைப் பின்பற்ற முற்படுவது மார்க்கத்திலில்லாத பல வழிபாடுகள் உருவாவதற்கும், சமூகங்களின் அழிவுக்கும் காரணமாக அமையுமென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
பனூ இஸ்ராயீலர்கள் காஃபிர்களைப் பார்த்து விட்டு, அவர்களுக்குப் பல சிலைகளிருப்பது போல் கண்ணால் பார்த்து வணங்கப்படுவதற்கு எமக்கும் ஒரு சிலையிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
இவ்வாறே, புதிதாக இஸ்லாத்தையேற்ற சில நபித் தோழர்கள் காஃபிர்களுக்கு இருப்பது போல் எமக்கும் பறக்கத் பெற ஒரு மரமிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
அவர்களது இந்தத் தவறான கேள்விக்குக் காஃபிர்கள் போன்று எம்மிடமும் ஏதாவது இருக்க வேண்டுமென்ற எண்ணம் தான் காரணமாக இருந்தது.
இதே எண்ணம்தான் மீலாது-மவ்லீது, கத்தம்-கந்தூரி போன்ற விழாக்களையும், கப்று வழிபாடு, உருவ வழிபாடு, கொடி வழிபாடு போன்ற ஷிர்க்குகளையும் இந்தச் சமூகத்தில் தோற்றுவித்துள்ளது.
மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (எமக்கு முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர்களையும், நஸாராக் களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “(அவர்களல்லாமல்) வேறு யாரை?” என நபி(ரலி) அவர்கள் கேட்டார்கள். (புகாரி 7320, முஸ்லிம் 2669)
இந்த ஹதீஸ் தவறு செய்வதிலும், ஆதாரத்திற்கு முரணாக நடப்பதிலும் முஸ்லிம்கள் எவ்வளவு தீவிரமாக வழிகெட்ட யஹூதி-நஸ்றானிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, யூத-கிறிஸ்தவ வழிமுறைகளை இஸ்லாமிய ரூபத்தில் முஸ்லிம் சமூகத்தில் நுழைப்பவர்கள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஸுன்னாவை ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதில்தான் உறுதியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் சற்றுக் கவனயீனமாக இருந்தாலும், ஷைத்தான் எம்மை வழிகேட்டில் தள்ளி விடுவான் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே, குஃப்ஃபார்களின் வழிமுறைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் அவர்களுக்கொப்பாக நடப்பதற்கும் முற்படக் கூடாது.
“யார் எக்கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ, அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே!” (அஹ்மத்) என்ற ஹதீஸைக் கவனத்திற்கொண்டு செயற்படுவோமாக!

அல்லாஹ் நம் அனைவரின் மீதும் நல்லருள் புரிவானாக....
அல்லாஹ் நம் அனைவரையும் சைத்தானின் தூண்டுகோளில் இருந்தும் அவன் விளைவிக்கும் குழப்பங்களிலிருந்தும் பாதுகாப்பானாக....
பித்அத் போன்ற சைத்தானிய செயலிலிருந்தும் நம்மை பதுகாப்பானாக....

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...