ஸஹீஹுல் புகாரி:4340.
அலீ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத்
தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு
உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்களின் மீது
அவர் கோபமுற்று, 'நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி
உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம்
(கட்டளையிட்டார்கள்)" என்று பதிலளித்தனர். அவர், 'அப்படியென்றால் எனக்காக
விறகு சேகரியுங்கள்" என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர்,
'நெருப்பு மூட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு
மூட்டினார்கள். அவர், 'இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்" என்று
கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்)
அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும், அவர்கள், '(நரக)
நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்"
என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும் வரை இவ்வாறே கூறிக்
கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர்
அமைதியடைந்தார். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, 'அதில்
அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள்
வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில் தான்"
என்று கூறினார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புஹாரி 7144.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
Volume :7 Book :93

No comments:
Post a Comment