3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Tuesday, April 20, 2021

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

 

ithawheed.blogspot.com

ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது.
இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நிலையில் உள்ளது?
இறைவனின் உரையாடலாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் குர்ஆனை நாம் எந்தளவு மதிக்கிறோம்?
ஒரு மனிதனுக்கு தன்னைப்படைத்த
இறைவனோடு தொடர்பு இல்லையென்றால்
அதை என்னவென்று சொல்வது?
.
அதுவும் இறைவனை நம்பியேற்றுக்கொண்டுள்ள ஒரு முஸ்லிமுக்கு
இறைவனோடு தொடர்பில்லை என்றால்
எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
குர்ஆனை ஓதத்தெரியுமா?
பொருளுணர்ந்து ஓது வது உண்டா?
குர்ஆனை புரிந்துகொள்ள முயற்சிக் கிறீர்களா?
குர்ஆனின் படி வாழ நடவடிக்கை எடுக்கிறீர்களா?
குர்ஆனை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் ஈடுபடுகிறீர்களா?
.
தொழுகையில் உங்களை படைத்த இறைவனோடு
உரையாட முடிகின்றதா?
இறைவனிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் வழிகாட்டுதல் வருவதை
உணருகிறீர்களா?
இறைவனின் இல்லத்தில் தனித்திருக்கும்போது
அந்த இல்லத்துக்குச் சொந்தக்காரன் உங்களை உபசரிக்கிறானா?
அதை நீங்கள் உணருவது உண்டா?
.
நஃப்ஸோடு தொடர்பு
................................
நஃப்ஸை உற்றுக் கவனித்து ‘ஆடிட்டிங்’ செய்கின்ற வாய்ப்பை ரமழான் வழங்குகின்றது.
நன்மையைச் செய்வதில் அதற்கு எந்தளவு ஆர்வம் இருக்கின்றது?
தீமையிலும் வேண்டத்தகாத செயல்களிலும் எந்தளவு மூழ்கிக்கிடக்கின்றது? இறைவனுடைய திருப்தியைப் பெறுகின்ற செயல்கள்
அதனிடம் எவ்வளவு உள்ளன?
இறைவனின் அதிருப்தியைப் பெறு கின்ற செயல்களை அது எத்தனை கொண்டுள்ளது?
.
ரமழானில் செய்கின்ற பற்பல செயல்களை ஏன்,
நம்மால் பிற சமயங்களில் செய்ய முடிவதில்லை?
மறுமைக்கான சம்பாதிப்பு ஏன், நம்மிடம் மிகக் குறைவாக உள்ளது?
.
‘இந்த உலகத்திலேயே தனது நஃப்ஸை கண்காணித்துக் கொண்டே இருப்போர் மறுமை நாள் விசாரணையில் தப்பித்துக் கொள்வார்கள்.
இந்த உலகத்தில் நஃப்ஸை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோர் மறுமை நாள் விசாரணையில் வசமாக சிக்கிக் கொள்வார்கள்’ என ஹஸன் பசரி (ரஹிமஹுல்லாஹு) கூறியுள்ளார்கள்
.
உறவினர்களோடு உறவும் தொடர்பும்
................................
ரமழானில் கவனத்தைப் பதிக்கவேண்டிய அடுத்த விஷயம்
உறவினர்களோடு நமக்குள்ள தொடர்பும் உறவும்
.
உறவுகளே இல்லாத உறவுகள் தேவையில்லை
எனத் தூக்கியெறியும் ஒரு காலத்தில் நாம் வாழுகிறோம்.
நமக்கிடையிலான உறவையும் தொடர்புகளையும்
‘பணம்’ தீர்மானிப்பது ஒரு முக்கியக் காரணம்.
உறவினர்களாக இருந்தாலும் சரி,
ஏழைகள் தங்களைத் தீண்டிவிடக் கூடாது
என்பதில் செல்வந்தர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்
.
நாம் ஏன் நமது உறவுகளைப் புறக்கணிக்கிறோம்?
அல்லது புறக்கணிக்கப் படுகிறோம்?
என சிந்தித்து அதனை சரிசெய்தே ஆகவேண்டும்
.
உறவுகளைப் பேணுவோரோடு இறைவன் உறவாடுகின்றான்,
உறவு முறையைப் புறக்கணிப்போர் மீது அதிருப்தி அடைகிறான்.
(புகாரி)
சின்ன சின்ன மளஸ்தாபங்களால் பேசாதிருப்போர்
இந்த ரமழானில் இறைதிருப்தியை மனதில் கொண்டு
தாமே முன்சென்று பேசிவிடவேண்டும்,
அப்படிச் செய்பவர்மீது
இறைவனின் அருட்பார்வை மையங்கொள்ளும் என்பதை
மறந்துவிடக் கூடாது.
.
முஸ்லிம் சகோதரர்களோடு உறவும் தொடர்பும்
........................................
ஒற்றுமை, கூட்டு வாழ்வுக்கான அழகிய சமூக முன்மாதிரியை இஸ்லாம் படைத்துள்ளது.
கெடுவாய்ப்பாக இந்த சமூகத்தில்தான்
இன்று கூட்டுவாழ்வு சீரழிந்து கிடக்கின்றது
.
கூட்டு வாழ்வுக்கான அழகிய செயல்வடிவ முன்னுதாரணங்களை
ரமழான் எடுத்துக்காட்டுகின்றது.
‘ஓருடலைப் போன்றவர்கள்’ என இறைத்தூதரால் அடையாளமிடப்பட்டவர்கள் ஒன்றுபோல இயங்குவதை ரமழானில் பார்க்க முடிகின்றது.
இந்த சகோதரத்துவம் வளருவதிலும் உடையாமல் நிலைகொள்வதிலும்
நமது பங்கு என்ன? என ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
.
‘அந்நஸீஹத்து லிகுல்லி முஸ்லி மின்’
என்பதன் அடையாள உருவாக நாம் மாற வேண்டும்
.
மானுட வர்க்கத்தோடு உறவும் தொடர்பும்
.............................
ஓரிறைவனை விட்டுவிட்டு
வேறுவேறு திசைகளில்
வேகமாகப் பயணித்துக் கொண்டுள்ள
நம் சக மனிதர்களை இறைவனை நோக்கி அழைத்தாக வேண்டும்.
அவர்களோடு நாம் கொள்ளவேண்டிய உறவு இது ஒன்றுதான்
.
ஆனால், இந்த ஒன்றைத்தவிர வேறு எல்லா உலக உறவுகளையும் நாம் அவர்களோடு கொண்டுள்ளோம்.
‘விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும்
உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் (மக்களை) அழைப்பீராக!’
(அல்குர்ஆன் 16:125)
.
‘உங்கள் மூலமாக ஒரே ஒரு நபரை இறைவன் நேர்வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் அது அரிய சிவப்பு ஒட்டகத்தைக் காட்டிலும் உங்களுக்கு மிக மேலானதாகும்’ என கைபர் போரின்போது அண்ணலார் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
 
ஆக்கம்: அப்துர்ரஹ்மான் உமரி

அறிஞர்களின் கருத்துக்கள் வஹியா - எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

 

ithawheed.blogspot.com

இயக்க சார்பு முகாம் சிந்தனைகளின் தாக்கம் பெற்ற பல சகோதரர்கள் குறித்த சில அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் அதன் விட்டில்களாக அவர்கள் மாறுவதுதான் நவீன தக்லீத் ஆகும்.

👉நவீன சிந்தனைகளின் முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்களாக இலங்கையில் சில சகோதரர்களால் காட்டப்படுகின்ற ஷேக் முஹம்மது கஸ்ஸாலி (ரஹ்) ஷேக் யூசுஃப் கர்ளாவி போன்ற அறிஞர்களின் கருத்துக்களை குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டுவது போன்று காட்டும் வழமை,

👉சவூதி அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாடல்களையும்
👉பீ .ஜே.  / Aஅறிஞர் குழு
👉முஃப்திகள்,
👉ஹஸரத்மார்கள்,

👉மொலானாக்கள் போன்றோரின் கருத்துக்களையும் இந்த நிலையில் எடைபோடுவதையும் கூற முடியும்.

பொதுவாக அறிஞர்கள் சரி, பிழை என்று இரு கட்டமைப்பில் இருந்து வருபவர்களே!

அதற்காக தவறு செய்யாத மனிதர்கள் உண்டா? எனக் கேட்டு மக்களை மடையர்களாக்குவதை விடுத்து, அவர்களின் தீர்ப்புக்கள் குர்ஆன் மற்றும் ஸஹீஹான சுன்னாவின் ஒழியில் பார்க்கப்படுவதே மார்க்கத்தில் வேண்டப்பட்டதும் அதன் பாதுகாப்புமாகும்.

அறிஞர்களும் மனிதர்கள்தானே! தவறே செய்யமாட்டார்களோ? போன்ற கேள்வியின் மூலம் முழு முஸ்லிம் உம்மாவும் ஏகோபித்த ஹதீஸ்கலை அறிஞர்கள் மீது விரல் நீட்டுவதன் மூலம் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாததே.

ஒருவர் தனது துறை அல்லாத மற்றொரு துறை பற்றி பேசினாலும் கருத்துக் குழப்பங்கள் எழுவது நியாயமானதே!

நவீன சிந்தனையாளர்களாக காண்பிக்கப்படும் அறிஞர்களை சாதாரன ஒரு மனிதன் தவறு செய்யாதவர் போல பார்ப்பதற்கும் ஷரீஆ படித்த ஒரு ஆலிம் ஒருவர் ஷேக்கா. ச்சே. அவரை மிஞ்சிய ஆளுண்டா? என தவறே செய்யாதவர் போல நினைப்பதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு.

இரண்டாமவரின் பார்வை மிகப் பெரும் ஆபத்தாகும். இதுவே தமிழ் அறிஞரான பீ.ஜே. பக்தர்கள் வழிகெட்டுப் போகக் காரணமானது.

அதே காரணம் அரபி அறிஞர்களை.முன்னுதாரணமாகக் கொளாவோரிடமும் உண்டு.

ஷேக் கர்ளாவி அவர்கள் சிறந்தொரு அறிஞர். அவர்கள் எழுதிய
الحلال والحرام
என்ற பெறுமதியான நூலின் ஹதீஸ்களை நவீன கால ஹதீஸ்கலை அறிஞர் என போற்றப்படும் ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் அதில் இடம் பெற்ற ஹதீஸ்களை ஸஹீஹ்- ளயீஃப் எனத் தரப் பகுப்பாய்வு செய்து
تخريج أحاديث الحلال والحرام
என்ற நூலை வெளியிட்டார்கள். இதே அல்பானி (ரஹ்) அவர்கள் ஷேக் முஹம்மத் கஸ்ஸாலியின்
فقه السيرة
என்ற நூலில் இடம் பெறும் ஹதீஸ்களை தரப்படுத்தி
تخريج أحاديث فقه السيرة
என்ற நூலை வெளியிட்டார்கள்.

இது ஷேக் கர்ளாவி மற்றும் கஸ்ஸாலி (ரஹ்) போன்றோரின் முயற்சிக்கு மதிப்பளித்தல் என்ற ஒரு ஆலிமின் நடுநிலைப் பார்வையாகும்.
நடுநிலை வாதம் பேசும் இது நம்மவரிடம் இல்லாதொழிக்கப்ட்ட ஒரு நடுநிலை என்பது ஒரு புறம் இருக்க, ஷேக் கர்ளாவி, மற்றும் முஹம்மது அல்கஸ்ஸாலி ஆகியோர் ஹதீஸ் துறையில் வல்லுனர்கள் கிடையாது என்பதே இதன் அர்த்தமாகும்.

இவ்வாறு நோக்குகின்ற போது ஷரீஆ சார்ந்து அவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்கள் பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையிலும் இடம் பெறும் என்பதைப் உணர்த்துகின்றது.

எனவே இவர்களின் தீர்ப்புக்களை சுனன் கிரந்தங்களின் ஹதீஸ்களை பகுப்பாய்வு செய்வது போன்று பகுப்பாய்வின்றி உறுதி செய்யாமல்
மக்கள் மன்றில் முன்வைப்பது ஒருவரின் தக்லீத் கண்மூடித்தனமான பின்பற்றலேயே காட்டும்.

ஏனெனில் இரண்டாம் நிலையில் பார்க்கப்பட வேண்டிய ஒரு அறிஞரின் கருத்தை உறுதி செய்யப்பட்ட வஹிபோன்று பாடம் சொல்லிக் கொடுப்பது இயக்க வெறிபிடித்த மூளையில் ஏற்படும் தக்லீத் பாரிசவாதமாகும்.

அதனைக் குணப்படுத்த ஒருவர் சார்ந்திருக்கும் அறிஞரின் கருத்துகளுக்கு மாற்றமாக கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதா? என்றும் சிந்திக்க அறிவு வேண்டும்.

இல்லாத போது தக்லீத் நோய் முத்தும் . இதுவே இன்றைய இயக்க வெறிகளின் பின்னால் காணப்படுகின்ற ரகசியமாகும்.

ஒரு குறிப்பு:

ஷேக் அல்பானி யார்? ஷேக் கர்ளாவியின் அறிவை மதித்து நூல் எழுதியவர். அப்படித்தானே? அவர்களிடம் ஷேக் கர்ளாவி பற்றி கேட்கப்பட்ட போது
شيخ قرضاوي؟ نعم! أقرضه قرضا.
ஷேக் கர்ளாவியா? அவரை ஒரே நறுக்காக நறுக்கி விடு என்றார்கள்.
فتاوى الألباني/ يوتيوب

எனவே ஷேக் கர்ளாவி அல்ல , அல்பானியும்தான் அனைவரும் மனிதர்களே!

ஆனால் எம்மை விட பன்மடங்கு சிறந்த அறிஞர்கள்தான். அதற்காக அவர்கள் சொல்வது இஜ்மாவுடைய நிலையில் பார்க்கப்படுவது போன்ற பிரச்சாரம் ஆபத்தானது.

ஏனெனில் முஸ்லிம் உலகில்

١) القرضاوي في الميزان. المؤلف : سليمان بن صالح الخراشي.

٢) كتاب : ” إسكات الكلب العاوي يوسف بن عبدالله القرضاوي ” . للشيخ مقبل بن هادي الوادعي رحمه .

٣) الفيض الكاوي في كشف ضلالات يوسف القرضاوي.

٤) القرضاوي في العراء.
تنبيه المسلمين من ضلالات يوسف القرضاوي

போன்ற ஷேக் கர்ளாவியைத் தாறுமாறாக விமர்சனம் செய்த நூல்கள் வலம் வருவது போன்று
ஷேக் முஹம்மது கஸ்ஸாலி அவர்களின்
كيف نتعامل مع السنة النبوية
என்ற நூலுக்கு பல மறுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில்

١) الرد على محمد الغزالي وبيان منهجه المنحرف .
الشيخ: محمد ناصر الدين الألباني رحمه الله

٢) طليعة سمط اللآلي في الرد على الشيخ محمد الغزالي
 المؤلف: أبو إسحاق الحويني

என்ற மறுப்பு நூல்கள் பிரபல்யமானது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் தம்பிகளே!

காய்த்த மரமே கல்லடிபடும் என மிக எளிதாக சொல்லி வரட்டு தக்லீதுகளை நியாயப்படுத்தாது இந்த மறுப்புக்கள் நியாயமானதா? இல்லையா? என்றும் நாம் சிந்திக்க தவறும் பட்சத்தில் முரட்டு கப்ருவணங்கிகள் , மத்ஹபு பிடிவாதம் பிடித்தவர்கள், பீ.ஜே. வணங்கிகள் தொடரில் நவீன கர்ளாவி மற்றும் முஹம்மது கஸ்ஸாலி வணங்கிகள் என்ற பெயர் நமக்கு உரித்தாகிவிடும்

இதனால் தான் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்

إذا صح الحديث فهو مذهبي

ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்றார்கள்.

அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு. இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

நடுநிலை என்பது குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த தீர்ப்பும் போக்குமாகும்.

Saturday, March 29, 2014

தப்லீக் ஜமாஅத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்.

தப்லீக் ஜமாஅத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்.

மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.

கப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டு கொள்வது கிடையாது. வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். சுருங்கக் கூறின் நன்மைகளை மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகையை மட்டும் ஏவுவார்கள். எந்தவொரு தீமையையும் தடுக்க முன்வர மாட்டார்கள்.

தீமையைத் தடுப்பது சாதாரண பணியல்ல. கை கால்களைப் பதம் பார்க்கக் கூடிய, கண்ணீரையும் செந்நீரையும் வரவழைக்கும் மிகக் கடினமான பணி என்பதை, செய்து பார்த்தால் தான் தெரியும். அதனால் தான் அல்லாஹ் அழைப்புப் பணியைப் பற்றிக் குறிப்பிடும் போது, நன்மையை மட்டும் ஏவுங்கள் என்று சொல்லாமல் தீமையையும் தடுக்கச் சொல்கின்றான்.(பார்க்க அல்குர்ஆன் 3-104, 3-114, 9-71)

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் யாரும் கோபப்படுவது கிடையாது. அதே சமயம் இறந்து விட்டவர்களிடம் உதவி தேடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது தான் மக்கள் கொந்தளிக்கின்றார்கள். திட்டுவதற்கு மட்டுமல்ல, வெட்டுவதற்கும் முன் வருகின்றார்கள். எனவே தீமையைத் தடுப்பது மிகப் பெரிய பணி. இதை தப்லீக் இயக்கத்தினர் புறக்கணித்து வருகின்றார்கள். இது இவர்களிடம் உள்ள அடிப்படையான தவறாகும்.

அடுத்து இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இவர்களுடைய வேதம்(?). அது தான் இவர்களால் பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் வாசிக்கப்படும் தஃலீம் தொகுப்பாகும். இதற்கு இவர்கள் திருக்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இவர்களது வேதம் என்று நாம் சொல்ல வேண்டியுள்ளது.
இவர்கள் தொழுத பிறகு தஃலீம் புத்தகத்தை வாசிக்கும் போது, “இதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல் அடங்கிய ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்” என்று சொன்னால் போதும். இவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். முகம் அனல் பிழம்பாகி விடும். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் பாமர மக்களுக்கு விளங்காது என்று உருப்படாத பதிலை உதிர்ப்பார்கள். ஜக்கரியா மவ்லானா போன்றவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பு எளிதாக மக்களுக்கு விளங்குமாம். ஆனால் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் விளங்காதாம்.
இதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் குர்ஆனின் பொழி பெயர்ப்பை வாசித்து விட்டால், இனிமேல் பள்ளிவாசலில் யாரும் குர்ஆன் பொழி பெயர்ப்பை வாசிக்கக் கூடாது என்று தடை விதிப்பார்கள். இந்தக் கொடூர நிகழ்ச்சி சமீபத்தில் ஓர் ஊரில் நடந்தேறியது.

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல் குர்ஆன் 74-49,50,51)
என்று அல்லாஹ் கூறுவது போல் இவர்களது நடைமுறை அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குர்ஆனை வாசிக்கக் கூடாது என்று சொன்னால் உடனே நாம் கொந்தளிப்போம். அதே சமயம் இந்தக் கருத்தை சமுதாயத்தில் உள்ள தப்லீக் காரர்கள் சொன்னால் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோம். இது என்ன நியாயம்?

இது தப்லீக் காரர்களின் அடிப்படையான மாபெரும் இரண்டாவது தவறாகும். புரிந்து கொள்வதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளோம். இன்னும் இது போன்று தவறுகள் பல அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இவர்கள் வேதமெனக் கொண்டாடும் தஃலீம் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பட்டியல் போடுவதென்றால் இந்த இதழ் தாங்காது. எனவே இந்த தப்லீக் இயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் பெரும்பாடு பட்டாக வேண்டும்.

இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட, நபிகளாரின் பொன்மொழிகளை விட தஃலீம் புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், ‘ஃபழாயில் அஃமால்’ போன்ற நூல்களைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிடும் மிகப் பெரிய நிறுவனமான ‘இதாரா இன்ஷாஅத் இ தீனிய்யா’ என்ற பதிப்பகத்தின் உரிமையாளர் முஹம்மது அனஸ் என்பார் தப்லீக் இயக்கத்திலிருந்து தவ்பா செய்து தவ்ஹீதை, குர்ஆன் ஹதீஸை மட்டும் தமது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டுள்ளார். இனி இது போன்ற தஃலீம் தொகுப்புகளை அச்சிடுவதில்லை என்றும் அவற்றை விற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார்.

இது போல் பல சகோதரர்களும் தவ்பா செய்து உண்மையான தவ்ஹீதுடைய பாதைக்கு வர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக. குர்ஆன், ஹதீஸைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஏகத்துவத்தில் வெளியிடப்படுகின்றது. அதைப் பார்த்து, பலருக்கும் படிக்கக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஷிர்க்கான கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் விற்பதை நிறுத்தி விட்டேன்

முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி

தப்லீக் ஜமாஅத்திலிருந்து தவ்பா செய்த முஹம்மது அனஸ் அவர்களிடம் பேட்டி கண்ட போது அவர் தெரிவித்ததாவது-

மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனஃபி ஃபிக்ஹ் நூல்களை நான் நாடினேன். இவ்வாறு நாடுவதற்குக் காரணம், ஹனஃபி நூல்கள் தான் எங்களுக்கு மார்க்கச் சட்ட நூல்கள் என்று தெரிவிக்கப்பட்டு, அந்தச் சூழலிலேயே நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக அந்நூல்களில் தீர்வை நாடினால் ஏதாவது ஒரு ஆலிம் அல்லது ஒரு ஷைஹ் தனது கருத்தைத் தெரிவித்திருப்பாரே தவிர குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்தவொரு விடையையும் நான் காணவில்லை.

அதனால் குர்ஆன் ஹதீஸிலே நான் நேரடியாகப் பார்க்க முற்பட்ட போது, ஃபிக்ஹ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகளுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் கண்டேன். இப்போது குர்ஆன் ஹதீஸில் முழுமையாக நான் களம் இறங்கி விட்டேன். இதனால் இப்போது என்னைச் சுற்றி இருப்பவர்களால், குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்களின் சிந்தனையில் வார்க்கப்பட்டவர்களால், நான் ஒரு மாபெரும் பாவத்தைச் செய்தவன் போல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் படுகின்றேன்.

நாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து விஷயங்களைத் தெரிந்தவுடன் அதைப் பின்பற்ற ஆரம்பித்தது தான் அவர்களுடைய பார்வையில் நான் செய்த மிகப் பெரும் தவறாகும். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். என்னுடைய மகனுக்கு நான் நபிவழியில் திருமணம் நடத்தி வைத்த போது அதற்காக எந்தவித சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்தவில்லை. என்னுடைய மகன் ஊர்வலமாக மணமகன் கோலத்தில் அழைத்து வரப்படவுமில்லை. இது எனது உறவினர்களை மேலும் ஆத்திரமூட்டியது. ஒரு கார் மட்டும் ஏற்பாடு செய்து என்னுடைய மருமகளை அழைத்து வந்தேன். ஹிஜாப் சம்பந்தப்பட்ட சில சிடி-க்களைக் கேட்டு விட்டு என்னுடைய கண்களில் நீர் வழிந்தோடியது. இவ்வளவு நாள் நாம் ஏன் இது போன்ற ஒரு ஹிஜாபைப் பின்பற்றாமல் இருந்து விட்டோம்? என்று வருந்தி அன்றைய தினத்திலிருந்து மார்க்க அடிப்படையில் கணவனுடைய சகோதரனிடம் கூட ஹிஜாபைப் பேண ஆரம்பித்து விட்டோம்.

பேட்டியாளர் : குர்ஆன் ஹதீஸின் பக்கம் உங்களை ஈர்த்தது எது?

முஹம்மது அனஸ் : அஹ்லே ஹதீஸின் வலை தளமான www.ahlehadees.com-ம் ஷைஹ் அதாவுல்லாஹ் தர்வி, ஷைஹ் ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்புரி, ஷைஹ் மிஃராஜ் ரப்பானி, ஷைஹ் பதீவுத்தீன் ராஷிதி ஆகியோர் ஆற்றிய ஒலி நாடாக்களைக் கேட்டதும் தான் என்னை இந்தக் கருத்தின் பால் அழைத்து வந்தது. (அஷ்ரஃப் அலீ தானவி எழுதிய, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் வெளியீடான) ‘அஃமாலே குர்ஆனி’ என்ற நூலில் உள்ள ஒரு செய்தியைப் பற்றி ஷைஹ் மிஃராஜ் ரப்பானி அவர்கள் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்ட அந்தச் செய்தியை* அஃமாலே குர்ஆனி நூலில் பார்த்து விட்டு மிகவும் வெட்கப் பட்டேன். வேதனைப் பட்டேன். அந்த நூலை விற்கக் கூடாது என்று என்னுடைய பதிப்பக ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு விட்டேன். இது போன்று ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை விற்பதையும் நான் நிறுத்தி விட்டேன்.

அஃமாலே குர்ஆனி என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக முஹம்மது அனஸ் அவர்கள் குறிப்பிடும் செய்தி இது தான்.

“ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலத்தில் உதிரப் போக்கு அதிகமாக ஏற்படுமானால் சூரத்து ஆலஇம்ரானின் 114வது வசனத்தை மூன்று துண்டுத் தாள்களில் எழுதி ஒன்றை வலது தொடையிலும், மற்றொன்றை இடது தொடையிலும், இன்னொன்றை தொப்புளுக்குக் கீழும் கட்டித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்”

பேட்டியாளர் : அஹ்லெ ஹதீசுக்கு வந்த பிறகு நீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர்கொள்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் : நாம் பல்வேறு சிந்தனைகளை உடைய மக்களுடன் வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நான் குர்ஆன் ஹதீசுக்கு ஒத்தமைந்த நூல்களை என் புத்தக நிலையத்தில் வைக்க ஆரம்பித்தேன். தங்கள் சிந்தனைக்கு மாற்றமான நூல்கள் என்றோ அல்லது ஸலஃபீ நூற்கள் என்றோ தெரிந்தால் போதும், மக்கள் அதைச் சீண்டுவது கிடையாது. அல்லாமா பின் பாஸ் மையம் என்று டெல்லியில் உள்ளது. அங்கிருந்து நான் நூல்களைத் தருவித்தேன். ஆனால் அவற்றை யாரும் வாங்குவது கிடையாது. காரணம், அந்நூல்களின் ஆசிரியர் லுக்மான் ஸலஃபீ என்பதால் தான். அது தான் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஆகும்.

பேட்டியாளர் : நீங்கள் மட்டும் தான் குர்ஆன் ஹதீஸ் படி நடக்க ஆரம்பித்துள்ளீர்களா? அல்லது உங்கள் குடும்பம் முழுவதுமா?

முஹம்மது அனஸ் : அல்ஹம்துலில்லாஹ். எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே தொழுகின்றனர். நாங்கள் ஏற்கனவே கைலானி என்பவர் எழுதிய தொழுகை நூலைப் படித்து முடித்திருக்கின்றோம். இது போல் புத்தகங்களைப் படிப்பதற்காக அன்றாடம் கால் மணி நேர அமர்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

பேட்டியாளர் : தங்களுடைய மகளார் (கணவர் வீட்டில்) பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக (மற்றொரு பேட்டியில்) தெரிவித்திருந்தீர்கள். உங்களுடைய மகளார் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையா? அல்லது வேறு பிரச்சனையா?

முஹம்மது அனஸ் : கைகளை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு என்ன விவகாரம் இருக்க முடியும்? விவகாரமே இது தான். தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துவது நபிவழி தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. கைகளை உயர்த்துவது தான் நபிவழி என்று மவ்லானா அப்துல் ஹை லக்னவி, இமாம் முஹம்மது ஆகியோர் தங்கள் நூல்களில் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். அவற்றை நான் போட்டோ காப்பி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வீண் பிடிவாதத்திலிருந்து விலகுவதாக இல்லை.

பேட்டியாளர் : ஷிர்க், பித்அத் போன்ற பாதைகளை விட்டு விட்டு வெளியே வந்து குர்ஆன் ஹதீஸ் என்ற நேரிய வழியைப் பின்பற்றும் உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மன திருப்தியுடன் உள்ளீர்களா?

முஹம்மது அனஸ் : நிச்சயமாக! நான் முழு திருப்தியுடன் உள்ளேன். எந்த அளவுக்கெனில், இப்போது நான் இறந்து விட்டால் கூட அல்லாஹ் தன் கருணையால் என்னை ஆரத் தழுவிக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றேன். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியும் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! பளிச்சிடும் பளிங்குக் கண்ணாடி போன்ற தூய்மையான மன நிறைவை நான் பெற்றிருக்கின்றேன்.

பேட்டியாளர் : உங்களுடைய வியாபாரமே புத்தகம் தான். உங்களது இந்த மாற்றம் உங்களது வியாபாரத் தொடர்புகளையும், வருமானத்தையும் பாதிக்கச் செய்திருக்கின்றதா?

முஹம்மது அனஸ் : நிச்சயமாக! ஃபழாயிலே ஸதகாத் (தர்மங்களின் சிறப்புகள்), ஃபழாயிலே ஹஜ் (ஹஜ்ஜின் சிறப்புகள்) என்ற தலைப்பில் உள்ள நூல்களை நான் உருது, ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிட்டு விற்பனை செய்தேன். இவை பெருமளவு விற்பனையாயின. உருதுப் பதிப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்குள் 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது இவற்றை அச்சிடாதது என்னைப் பெருமளவு பாதித்துள்ளது. எனினும் அல்லாஹ் என்னைக் காப்பானாக! நான் பட்டினி கிடக்கும் ஒரு கட்டம் வந்தாலும் சரி தான். அந்த நிலையை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வேன். காரணம் ஒவ்வொருவரும் கண் மூடிய பின் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

பேட்டியாளர் : நீங்கள் இது வரை விற்றுக் கொண்டிருந்த அமல்களின் சிறப்புகள் என்ற இந்த நூல்கள் (தர்மத்தின் சிறப்புகள், ஹஜ்ஜின் சிறப்புகள் ஆகியவை இந்நூலின் பாகங்கள் தான்) பல ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் தெரிந்திருப்பீர்கள். “ஒரு பெரியார் மறைவான ஞானத்தை அறிகின்றார்”, “(நபி – ஸல் அவர்கள் இறந்த பின்னர்) வானத்தி-ருந்து இறங்கினார்கள்”, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை கப்ரி-ருந்து வெளியே வந்தது”, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்ன போது அவர்கள் கூறிய பதிலை நாங்கள் செவியுற்றோம்” என்று தப்லீக் தலைவர்கள் கூறுகின்ற பிதற்றல்கள் இன்னும் இது போன்ற அப்பட்டமான ஷிர்க்கான கருத்துக்கள் இந்நூற்களில் பொதிந்து கிடக்கின்றன என்று தெரிந்த பிறகு இந்நூல்களைப் பல மொழிகளில் விற்கப் போகின்றீர்களா?
முஹம்மது அனஸ் : விற்கப் போவதில்லை. இந்தப் புத்தகங்களை விற்பனை செய்ததையே பாவம் என்று நினைக்கின்றேன். அதனால் வேறெதையும் விற்றாலும் விற்பேனே தவிர இது போன்றவற்றை ஒரு போதும் விற்க மாட்டேன். இந்தப் புத்தகங்கள் அனைத்திற்கும் நானே ஏகபோக உரிமையாளராக இருந்திருந்தால் அன்றே நான் கட-ல் தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் அதே சமயம் மிக மிக அதிகமான வழிகேடான கருத்துக்களைக் கொண்டுள்ள ஃபழாயிலே அஃமா-ன் இரண்டாம் பாகமான ஃபழாயில் ஸதகா மற்றும் ஹஜ் என்ற நூல்களை நாங்கள் நிறுத்தி விட்டோம். ஃபழாயில் அஃமால் (முதல் பாகத்தையும்) இப்போது இன்ஷா அல்லாஹ் நிறுத்தி விடுவோம்.

பேட்டியாளர் : எவ்வளவு காலமாக ஃபழாயில் அஃமாலை நீங்கள் அச்சிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பணியைத் துவக்கியது உங்கள் தந்தையார் தானே!

முஹம்மது அனஸ் : என்னுடைய தந்தையார் தான் இதை ஆப்செட்டில் முதன் முதலில் அச்சிட்டார். (இவர்கள் 50 ஆண்டு காலமாக இவற்றை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்) துவக்கத்தில் இவை ஹிக்காயத்-இ-ஸஹாபா, ஃபழாயில்-இ-நமாஸ் (தொழுகையின் சிறப்புகள்) என்று தனித்தனி நூல்களாக அச்சிடப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் ஒரே வால்யூமாக ஆக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானாவின் “தப்லீக் – இ – நிஸாப்’ என்று எனது தந்தையாரால் தான் இப்படி ஒரு பெயர் கொடுக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானா அவர்கள் இப்படியொரு பெயரைக் கொடுக்கவில்லை. தப்லீக் – இ – நிஸாப் என்று இவ்வாறு பெயர் கொடுத்ததற்கு பரேலவிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததும் இதற்கு அமல்களின் சிறப்புகள் என்று பெயரிடப்பட்டது.

பேட்டியாளர் : இன்னும் இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகித்து, விற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன அறிவுரை வழங்க விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : கொள்கையைப் பாழாக்கும் இத்ததைகய புத்தகங்களை விற்று பரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஹலாலான ஒன்றல்ல! ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போது, புறா சரித்திரங்கள், பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும்? (சூஃபிகள் சொன்ன பொய்யான கதைப் புத்தகங்களைக் குறிப்பிடுகின்றார்) இதுபோன்ற புத்தகங்களை விற்பதை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமான நூல்கள் விற்கப்பட வேண்டும்.

பேட்டியாளர் : உங்கள் இரு சகோதரர்கள் இந்த நபிவழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா?

முஹம்மது அனஸ் : ஆம்! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதரர் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். “தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும்? இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவா? அதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவா? எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சத்திய நெறியில் இருந்த காரணத்தால் நான் தொழுகையில் கையை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்” என்று என்னிடம் என் சகோதரர் கூறினார்.

பேட்டியாளர் : சத்தியத்தைத் தேடும் பணியில் தப்லீக் ஜமாஅத்தினரையும் அரவணைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : குர்ஆன் ஹதீஸ் போதனையைத் தேடுவதும், தங்கள் செயல்கள் குர்ஆன் ஹதீசுக்கு இசைவாக உள்ளனவா? என்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். இது தான் எல்லோருக்கும் தெரிவிக்கும் பொதுவான செய்தியாகும்.

பேட்டியாளர் : அஷ்ரப் அலீ தானவியின் “அஃமாலே குர்ஆன்’ போன்ற நூல்களைத் திரட்டி பரப்புகின்ற தேவ்பந்தி ஆலிம்களுக்கு எதையேனும் கூற விரும்புகின்றீர்களா?

முஹம்மது அனஸ் : ஆம்! மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாக, பின்னால் சொல்லப் படுகின்றதா? அல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை. அல்லாஹ்வே உண்மையை அறிவான். ஆனால் நான் அந்த நூலில் கண்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீசுக்கு நேர் முரணானவையாகும். அதனால் அவற்றை விற்பதை நிறுத்தி விட்டேன்.

பேட்டியாளர் : உறுதியாக முன்னால் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பிந்திய காலத்தில் இது அஷ்ரப் அலீ தானவீயால் எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் எழுதாததை அவர்கள் எழுதினார்கள் என்று தப்பாக சொல்லப்பட்டிருக்குமானால் அப்போதே தேவ்பந்தி உலமாக்கள் மறுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அஷ்ரப் அலீ தானவீ தான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டல்லவா வருகின்றார்கள்? எனவே இது நிச்சயமாக அஷ்ரப் அலீ தானவீ எழுதியது தான் என்பது ஊர்ஜிதமாகின்றது.

முஹம்மது அனஸ் : ஜக்கரியா மவ்லானா எழுதிய “ஹிகாயத் அவ்லியா’ (வலிமார்கள் வரலாறு) என்ற நூலை நான் படித்த போது பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். (பல்வேறு கப்ஸாக்களை உள்ளடக்கிய) இந்நூலுக்கு அஃபாஹே ஸலாஸா என்ற பெயர் வேறு உள்ளது. மொத்தத்தில் 60-70 வகையான புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்

பேட்டியாளர் : ஜக்கரியா மவ்லானா எழுதிய ஜிஷ்தியா தரீக்கா வரலாற்றை படித்திருக்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் : நான் அந்த புத்தகத்திற்காக வந்த ஆர்டர்களையும் நிறுத்தி விட்டேன். அல்லாமல் இதுபோன்ற புத்தகங்களில் வரும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்ற (விமர்சன) நூல் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு யாரேனும் இம்மாதிரியான குறிப்புகளைத் தெரிவித்தால் நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தவறாக இருந்தால் அதை நீக்கி விடுவேன்.

பேட்டியாளர் : இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் தேவ்பந்தி உலமாக்கள் மற்றும் பரேலவிகள் ஆவர். அவர்களது கண்மூடித்தனமான பின்பற்றுதல் அவர்களை குர்ஆன் ஹதீஸ் பக்கம் திரும்புவதை விட்டும் தடுக்கின்றது. ஏன்? அவர்கள் சத்தியத்தைத் தெரிந்த பின்னரும் அதை மக்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றார்கள். இவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?

முஹம்மது அனஸ் : மார்க்கம் நமக்கு நபித்தோழர்கள் மூலம் வந்தது. யாரேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களைத் தேடினால் அவை அவருக்குக் கிடைக்காது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னால் மரணித்த பீர்மார்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்களின் முரீதுகள் எழுதித் தள்ளுகின்றனர். இன்றளவும் நாம் சஹாபாக்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை.
(இதை அனஸ் அவர்கள் இங்கு குறிப்பிடக் காரணம், அஷ்ரப் அலீ தானவீக்குரிய வரலாறு நூல்கள் அதிகம் உள்ளன. அவை பத்து பாகங்களாக வெளிவந்துள்ளன.)

பேட்டியாளர் : ஒரு பெரிய நூல் வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

முஹம்மது அனஸ் : உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். அவை குர்ஆன் ஹதீசுக்கு ஒத்து இருக்கின்றனவா? என்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியா? தவறா? என்று (குர்ஆன் ஹதீஸ் மூலம்) உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
(பேட்டி இத்துடன் நிறைவடைகின்றது)

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...