3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Thursday, July 4, 2013

மார்க்க வியாபாரிகளே - திருந்திக்கொள்ளுங்கள்

மார்க்க வியாபாரிகளே - திருந்திக்கொள்ளுங்கள்

ithawheed.blogspot.com
9:9
அவர்கள்   அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்)   வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை   மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)

9:34
நம்பிக்கைக் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரியிலும்,துறவிகளிலும்…   அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின்   பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும்,   வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில்   செலவிடாதிருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!)   நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34)
3:187

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க   வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு   நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப்   பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக்   கொண்டார்கள் – அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.   (அல்குர்ஆன் 3:187)

5:63
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள்   உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க   வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.   (அல்குர்ஆன் 5:63)
  அல்லாஹ் இறக்கியருளிய நேர்வழியை மிகமிக   சொற்பமானவர்களே விளங்குவார்கள்;  மிகமிகக் குறைந்தவர்களே விளங்குவார்கள்   என்று அல்குர்ஆனில் ஆணித்தரமாக அல்லாஹ் அறிவிக்கிறான்.

7:3
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்;   அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்;   நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.    (அல்குர்ஆன் 7:3)
இந்த மிகமிக சொற்பமான சுவர்க்கம் செல்லும் மக்கள் அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான   ஹதீஸ்களையும் நேரடியாக விளங்கி அதன்படி நடக்கிறார்கள். இவர்களே அல்லாஹ்வின்   நன்மாராயம் பெற்றவர்கள், பாக்கியசாலிகள், அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று   சுவர்க்கம் செல்கிறவர்கள்.
இதற்கு மாறாக மக்களில் மிகமிகப் பெருங்கொண்ட கூட்டம் அல்குர்ஆனையும்,   ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் விளங்கக் கூடியவர்களாக இல்லை. நரகத்தை நிரப்புவதற்காகவே   செயல்படுகிறவர்கள். இதையும் அல்குர்ஆன் அதிகமான இடங்களில் சுட்டிக்காட்டுகிறது.   அவை வருமாறு:

17:89
“நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகத்   தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் (இதை)   நிராகரிக்காதிருக்கவில்லை. (17:89)

25:30
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து   ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)
குறிப்பாக இந்த இறைவாக்குகளை மீண்டும், மீண்டும் படித்து உள்வாங்கி ஆழ்ந்து   சிந்தியுங்கள். அல்குர்ஆன் மனிதர்களில் ஆண், பெண் அனைவரும் விளங்கும் நிலையில்   இறக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அரபி மொழி படித்த  மட்டுமே விளங்க   முடியும் என வாதிப்போர் ஷைத்தானின் தோழர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிய   முடியும்.
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் செல்லும் மக்கள் மிகமிகக் குறைவு.   அவர்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கி அதன்படி நடப்பார்கள். மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்களின் வலையில் சிக்க மாட்டார்கள்!  மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்கள் அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் உள்ளதை   உள்ளபடி எடுத்துச் சொல்ல முன் வரமாட்டார்கள்.
அதனால்தான் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி, தொண்டை தொழிலாக்கி வயிற்றை நிரப்ப    குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி சொல்லாமல், கோணல் வழிகளான  கற்பனைகளை   மக்களுக்குப் போதிக்கின்றனர்.

11:18
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்?   அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள் தாம்   தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்;   இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். (11:18)
எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும்   நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. அனைத்து   நபிமார்களையும் மக்களிடம் கூலியை எதிர்பார்த்துச் செயல்படாமல், சொந்த உழைப்பைக்   கொண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லாஹ்   கட்டளையிட்டிருப்பதின் இரகசியம் இதுதான்.

36:21
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே   நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).    அல்குர்ஆன் யாஸீன் (36:21)
  இறைவாக்கு இதையே மிகமிக உறுதியாக கூறுகிறது.   மக்களிடம் கூலியை – சம்பளத்தை எதிர்பார்க்காமல், அல்லாஹ்வுக்காக மட்டுமே மார்க்கப்   பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும். அதற்கு மாறாக   சம்பளத்திற்காக மார்க்கப்பணி புரிகிறவர்கள் ஒரு போதும் நேர்வழியைப் போதிக்க   மாட்டார்கள். காரணம் நேர்வழி செல்லும் சொற்பமான மக்களைக் கொண்டு அவர்களின்   நோக்கம் நிறைவேறாது. சம்பளத்திற்காக நரகம்செல்லும் அதிகமான மக்களைக் கவர்வதாக   இருந்தால், அவர்கள் விரும்பும் கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயம்   ஏற்படுகிறது.
புரோகிதரர்கள் வழிகேடுகளையே நேர்வழியாக – மார்க்கமாகப் போதிக்கும் காரணம்   இப்போது சுய சிந்தனையாளர்களுக்கு,  நிச்சயமாக புரிந்திருக்கும்.   முஸ்லிம்கள்   அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் நேரடியாகப் படித்து விளங்கிச் செயல்பட்டால் மட்டுமே   ஈடேற்றம் பெற முடியும். அல்லாஹ் அருள் புரிவானாக!

Ori Source : http://www.readislam.net/portal/archives/5648

Sunday, April 28, 2013

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்


இஸ்லாம்

அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும். இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்! (41:30-32)
திண்ணமாக எவர்கள் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள். (46:13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:
1-அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவதோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.
2- எவர்கள் அல்லாஹ் எங்கள் இறை வன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலை த்து நிற்கின்றார்களோ… அதாவது எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோ…என்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.
3-மரண நேரத்தில் இத்தகையவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது மறுமைக்காக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து சுகம் மற்றும் பிள்ளைகள்; குடும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்க ள் நற்செய்தி கூறுவார்களாம்.
4-அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். ”உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்” என்று அவ்வானவர்கள் கூறுவார்கள்.40:30
5-இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத்துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். ”இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்”. (அல் குர்ஆன்)
6-உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களுக்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். ”உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்”". (அல்குர்ஆன்)
7-இந்த உறுதிப்பாடு அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும்.
தற்போது இஸ்லாமிய சமுதாயம் மார்க்கத்தில் பலவகையான சந்தேகங்களும் அவரவர் தம் மனோச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்ட தோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர்.
அதாவது மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல்ஆகி விடுவார்.(நபிமொழி)
கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படுகின்றன . இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான சகோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உத வக்கூடியவர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்கள்

Wednesday, March 20, 2013

மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்

 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
ithawheed.blogspot.com 

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.
“குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.
“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
“இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.
“இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211) என்று கூறும் குர்ஆன்,
“(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.
ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...