3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Tuesday, April 20, 2021

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

 

ithawheed.blogspot.com

ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது.
இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நிலையில் உள்ளது?
இறைவனின் உரையாடலாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் குர்ஆனை நாம் எந்தளவு மதிக்கிறோம்?
ஒரு மனிதனுக்கு தன்னைப்படைத்த
இறைவனோடு தொடர்பு இல்லையென்றால்
அதை என்னவென்று சொல்வது?
.
அதுவும் இறைவனை நம்பியேற்றுக்கொண்டுள்ள ஒரு முஸ்லிமுக்கு
இறைவனோடு தொடர்பில்லை என்றால்
எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
குர்ஆனை ஓதத்தெரியுமா?
பொருளுணர்ந்து ஓது வது உண்டா?
குர்ஆனை புரிந்துகொள்ள முயற்சிக் கிறீர்களா?
குர்ஆனின் படி வாழ நடவடிக்கை எடுக்கிறீர்களா?
குர்ஆனை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் ஈடுபடுகிறீர்களா?
.
தொழுகையில் உங்களை படைத்த இறைவனோடு
உரையாட முடிகின்றதா?
இறைவனிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் வழிகாட்டுதல் வருவதை
உணருகிறீர்களா?
இறைவனின் இல்லத்தில் தனித்திருக்கும்போது
அந்த இல்லத்துக்குச் சொந்தக்காரன் உங்களை உபசரிக்கிறானா?
அதை நீங்கள் உணருவது உண்டா?
.
நஃப்ஸோடு தொடர்பு
................................
நஃப்ஸை உற்றுக் கவனித்து ‘ஆடிட்டிங்’ செய்கின்ற வாய்ப்பை ரமழான் வழங்குகின்றது.
நன்மையைச் செய்வதில் அதற்கு எந்தளவு ஆர்வம் இருக்கின்றது?
தீமையிலும் வேண்டத்தகாத செயல்களிலும் எந்தளவு மூழ்கிக்கிடக்கின்றது? இறைவனுடைய திருப்தியைப் பெறுகின்ற செயல்கள்
அதனிடம் எவ்வளவு உள்ளன?
இறைவனின் அதிருப்தியைப் பெறு கின்ற செயல்களை அது எத்தனை கொண்டுள்ளது?
.
ரமழானில் செய்கின்ற பற்பல செயல்களை ஏன்,
நம்மால் பிற சமயங்களில் செய்ய முடிவதில்லை?
மறுமைக்கான சம்பாதிப்பு ஏன், நம்மிடம் மிகக் குறைவாக உள்ளது?
.
‘இந்த உலகத்திலேயே தனது நஃப்ஸை கண்காணித்துக் கொண்டே இருப்போர் மறுமை நாள் விசாரணையில் தப்பித்துக் கொள்வார்கள்.
இந்த உலகத்தில் நஃப்ஸை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோர் மறுமை நாள் விசாரணையில் வசமாக சிக்கிக் கொள்வார்கள்’ என ஹஸன் பசரி (ரஹிமஹுல்லாஹு) கூறியுள்ளார்கள்
.
உறவினர்களோடு உறவும் தொடர்பும்
................................
ரமழானில் கவனத்தைப் பதிக்கவேண்டிய அடுத்த விஷயம்
உறவினர்களோடு நமக்குள்ள தொடர்பும் உறவும்
.
உறவுகளே இல்லாத உறவுகள் தேவையில்லை
எனத் தூக்கியெறியும் ஒரு காலத்தில் நாம் வாழுகிறோம்.
நமக்கிடையிலான உறவையும் தொடர்புகளையும்
‘பணம்’ தீர்மானிப்பது ஒரு முக்கியக் காரணம்.
உறவினர்களாக இருந்தாலும் சரி,
ஏழைகள் தங்களைத் தீண்டிவிடக் கூடாது
என்பதில் செல்வந்தர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்
.
நாம் ஏன் நமது உறவுகளைப் புறக்கணிக்கிறோம்?
அல்லது புறக்கணிக்கப் படுகிறோம்?
என சிந்தித்து அதனை சரிசெய்தே ஆகவேண்டும்
.
உறவுகளைப் பேணுவோரோடு இறைவன் உறவாடுகின்றான்,
உறவு முறையைப் புறக்கணிப்போர் மீது அதிருப்தி அடைகிறான்.
(புகாரி)
சின்ன சின்ன மளஸ்தாபங்களால் பேசாதிருப்போர்
இந்த ரமழானில் இறைதிருப்தியை மனதில் கொண்டு
தாமே முன்சென்று பேசிவிடவேண்டும்,
அப்படிச் செய்பவர்மீது
இறைவனின் அருட்பார்வை மையங்கொள்ளும் என்பதை
மறந்துவிடக் கூடாது.
.
முஸ்லிம் சகோதரர்களோடு உறவும் தொடர்பும்
........................................
ஒற்றுமை, கூட்டு வாழ்வுக்கான அழகிய சமூக முன்மாதிரியை இஸ்லாம் படைத்துள்ளது.
கெடுவாய்ப்பாக இந்த சமூகத்தில்தான்
இன்று கூட்டுவாழ்வு சீரழிந்து கிடக்கின்றது
.
கூட்டு வாழ்வுக்கான அழகிய செயல்வடிவ முன்னுதாரணங்களை
ரமழான் எடுத்துக்காட்டுகின்றது.
‘ஓருடலைப் போன்றவர்கள்’ என இறைத்தூதரால் அடையாளமிடப்பட்டவர்கள் ஒன்றுபோல இயங்குவதை ரமழானில் பார்க்க முடிகின்றது.
இந்த சகோதரத்துவம் வளருவதிலும் உடையாமல் நிலைகொள்வதிலும்
நமது பங்கு என்ன? என ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
.
‘அந்நஸீஹத்து லிகுல்லி முஸ்லி மின்’
என்பதன் அடையாள உருவாக நாம் மாற வேண்டும்
.
மானுட வர்க்கத்தோடு உறவும் தொடர்பும்
.............................
ஓரிறைவனை விட்டுவிட்டு
வேறுவேறு திசைகளில்
வேகமாகப் பயணித்துக் கொண்டுள்ள
நம் சக மனிதர்களை இறைவனை நோக்கி அழைத்தாக வேண்டும்.
அவர்களோடு நாம் கொள்ளவேண்டிய உறவு இது ஒன்றுதான்
.
ஆனால், இந்த ஒன்றைத்தவிர வேறு எல்லா உலக உறவுகளையும் நாம் அவர்களோடு கொண்டுள்ளோம்.
‘விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும்
உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் (மக்களை) அழைப்பீராக!’
(அல்குர்ஆன் 16:125)
.
‘உங்கள் மூலமாக ஒரே ஒரு நபரை இறைவன் நேர்வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் அது அரிய சிவப்பு ஒட்டகத்தைக் காட்டிலும் உங்களுக்கு மிக மேலானதாகும்’ என கைபர் போரின்போது அண்ணலார் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
 
ஆக்கம்: அப்துர்ரஹ்மான் உமரி

No comments:

Post a Comment

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...