3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Tuesday, April 20, 2021

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

 

ithawheed.blogspot.com

ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது.
இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நிலையில் உள்ளது?
இறைவனின் உரையாடலாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் குர்ஆனை நாம் எந்தளவு மதிக்கிறோம்?
ஒரு மனிதனுக்கு தன்னைப்படைத்த
இறைவனோடு தொடர்பு இல்லையென்றால்
அதை என்னவென்று சொல்வது?
.
அதுவும் இறைவனை நம்பியேற்றுக்கொண்டுள்ள ஒரு முஸ்லிமுக்கு
இறைவனோடு தொடர்பில்லை என்றால்
எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
குர்ஆனை ஓதத்தெரியுமா?
பொருளுணர்ந்து ஓது வது உண்டா?
குர்ஆனை புரிந்துகொள்ள முயற்சிக் கிறீர்களா?
குர்ஆனின் படி வாழ நடவடிக்கை எடுக்கிறீர்களா?
குர்ஆனை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் ஈடுபடுகிறீர்களா?
.
தொழுகையில் உங்களை படைத்த இறைவனோடு
உரையாட முடிகின்றதா?
இறைவனிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் வழிகாட்டுதல் வருவதை
உணருகிறீர்களா?
இறைவனின் இல்லத்தில் தனித்திருக்கும்போது
அந்த இல்லத்துக்குச் சொந்தக்காரன் உங்களை உபசரிக்கிறானா?
அதை நீங்கள் உணருவது உண்டா?
.
நஃப்ஸோடு தொடர்பு
................................
நஃப்ஸை உற்றுக் கவனித்து ‘ஆடிட்டிங்’ செய்கின்ற வாய்ப்பை ரமழான் வழங்குகின்றது.
நன்மையைச் செய்வதில் அதற்கு எந்தளவு ஆர்வம் இருக்கின்றது?
தீமையிலும் வேண்டத்தகாத செயல்களிலும் எந்தளவு மூழ்கிக்கிடக்கின்றது? இறைவனுடைய திருப்தியைப் பெறுகின்ற செயல்கள்
அதனிடம் எவ்வளவு உள்ளன?
இறைவனின் அதிருப்தியைப் பெறு கின்ற செயல்களை அது எத்தனை கொண்டுள்ளது?
.
ரமழானில் செய்கின்ற பற்பல செயல்களை ஏன்,
நம்மால் பிற சமயங்களில் செய்ய முடிவதில்லை?
மறுமைக்கான சம்பாதிப்பு ஏன், நம்மிடம் மிகக் குறைவாக உள்ளது?
.
‘இந்த உலகத்திலேயே தனது நஃப்ஸை கண்காணித்துக் கொண்டே இருப்போர் மறுமை நாள் விசாரணையில் தப்பித்துக் கொள்வார்கள்.
இந்த உலகத்தில் நஃப்ஸை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோர் மறுமை நாள் விசாரணையில் வசமாக சிக்கிக் கொள்வார்கள்’ என ஹஸன் பசரி (ரஹிமஹுல்லாஹு) கூறியுள்ளார்கள்
.
உறவினர்களோடு உறவும் தொடர்பும்
................................
ரமழானில் கவனத்தைப் பதிக்கவேண்டிய அடுத்த விஷயம்
உறவினர்களோடு நமக்குள்ள தொடர்பும் உறவும்
.
உறவுகளே இல்லாத உறவுகள் தேவையில்லை
எனத் தூக்கியெறியும் ஒரு காலத்தில் நாம் வாழுகிறோம்.
நமக்கிடையிலான உறவையும் தொடர்புகளையும்
‘பணம்’ தீர்மானிப்பது ஒரு முக்கியக் காரணம்.
உறவினர்களாக இருந்தாலும் சரி,
ஏழைகள் தங்களைத் தீண்டிவிடக் கூடாது
என்பதில் செல்வந்தர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்
.
நாம் ஏன் நமது உறவுகளைப் புறக்கணிக்கிறோம்?
அல்லது புறக்கணிக்கப் படுகிறோம்?
என சிந்தித்து அதனை சரிசெய்தே ஆகவேண்டும்
.
உறவுகளைப் பேணுவோரோடு இறைவன் உறவாடுகின்றான்,
உறவு முறையைப் புறக்கணிப்போர் மீது அதிருப்தி அடைகிறான்.
(புகாரி)
சின்ன சின்ன மளஸ்தாபங்களால் பேசாதிருப்போர்
இந்த ரமழானில் இறைதிருப்தியை மனதில் கொண்டு
தாமே முன்சென்று பேசிவிடவேண்டும்,
அப்படிச் செய்பவர்மீது
இறைவனின் அருட்பார்வை மையங்கொள்ளும் என்பதை
மறந்துவிடக் கூடாது.
.
முஸ்லிம் சகோதரர்களோடு உறவும் தொடர்பும்
........................................
ஒற்றுமை, கூட்டு வாழ்வுக்கான அழகிய சமூக முன்மாதிரியை இஸ்லாம் படைத்துள்ளது.
கெடுவாய்ப்பாக இந்த சமூகத்தில்தான்
இன்று கூட்டுவாழ்வு சீரழிந்து கிடக்கின்றது
.
கூட்டு வாழ்வுக்கான அழகிய செயல்வடிவ முன்னுதாரணங்களை
ரமழான் எடுத்துக்காட்டுகின்றது.
‘ஓருடலைப் போன்றவர்கள்’ என இறைத்தூதரால் அடையாளமிடப்பட்டவர்கள் ஒன்றுபோல இயங்குவதை ரமழானில் பார்க்க முடிகின்றது.
இந்த சகோதரத்துவம் வளருவதிலும் உடையாமல் நிலைகொள்வதிலும்
நமது பங்கு என்ன? என ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
.
‘அந்நஸீஹத்து லிகுல்லி முஸ்லி மின்’
என்பதன் அடையாள உருவாக நாம் மாற வேண்டும்
.
மானுட வர்க்கத்தோடு உறவும் தொடர்பும்
.............................
ஓரிறைவனை விட்டுவிட்டு
வேறுவேறு திசைகளில்
வேகமாகப் பயணித்துக் கொண்டுள்ள
நம் சக மனிதர்களை இறைவனை நோக்கி அழைத்தாக வேண்டும்.
அவர்களோடு நாம் கொள்ளவேண்டிய உறவு இது ஒன்றுதான்
.
ஆனால், இந்த ஒன்றைத்தவிர வேறு எல்லா உலக உறவுகளையும் நாம் அவர்களோடு கொண்டுள்ளோம்.
‘விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும்
உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் (மக்களை) அழைப்பீராக!’
(அல்குர்ஆன் 16:125)
.
‘உங்கள் மூலமாக ஒரே ஒரு நபரை இறைவன் நேர்வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் அது அரிய சிவப்பு ஒட்டகத்தைக் காட்டிலும் உங்களுக்கு மிக மேலானதாகும்’ என கைபர் போரின்போது அண்ணலார் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
 
ஆக்கம்: அப்துர்ரஹ்மான் உமரி

அறிஞர்களின் கருத்துக்கள் வஹியா - எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

 

ithawheed.blogspot.com

இயக்க சார்பு முகாம் சிந்தனைகளின் தாக்கம் பெற்ற பல சகோதரர்கள் குறித்த சில அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் அதன் விட்டில்களாக அவர்கள் மாறுவதுதான் நவீன தக்லீத் ஆகும்.

👉நவீன சிந்தனைகளின் முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்களாக இலங்கையில் சில சகோதரர்களால் காட்டப்படுகின்ற ஷேக் முஹம்மது கஸ்ஸாலி (ரஹ்) ஷேக் யூசுஃப் கர்ளாவி போன்ற அறிஞர்களின் கருத்துக்களை குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டுவது போன்று காட்டும் வழமை,

👉சவூதி அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாடல்களையும்
👉பீ .ஜே.  / Aஅறிஞர் குழு
👉முஃப்திகள்,
👉ஹஸரத்மார்கள்,

👉மொலானாக்கள் போன்றோரின் கருத்துக்களையும் இந்த நிலையில் எடைபோடுவதையும் கூற முடியும்.

பொதுவாக அறிஞர்கள் சரி, பிழை என்று இரு கட்டமைப்பில் இருந்து வருபவர்களே!

அதற்காக தவறு செய்யாத மனிதர்கள் உண்டா? எனக் கேட்டு மக்களை மடையர்களாக்குவதை விடுத்து, அவர்களின் தீர்ப்புக்கள் குர்ஆன் மற்றும் ஸஹீஹான சுன்னாவின் ஒழியில் பார்க்கப்படுவதே மார்க்கத்தில் வேண்டப்பட்டதும் அதன் பாதுகாப்புமாகும்.

அறிஞர்களும் மனிதர்கள்தானே! தவறே செய்யமாட்டார்களோ? போன்ற கேள்வியின் மூலம் முழு முஸ்லிம் உம்மாவும் ஏகோபித்த ஹதீஸ்கலை அறிஞர்கள் மீது விரல் நீட்டுவதன் மூலம் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாததே.

ஒருவர் தனது துறை அல்லாத மற்றொரு துறை பற்றி பேசினாலும் கருத்துக் குழப்பங்கள் எழுவது நியாயமானதே!

நவீன சிந்தனையாளர்களாக காண்பிக்கப்படும் அறிஞர்களை சாதாரன ஒரு மனிதன் தவறு செய்யாதவர் போல பார்ப்பதற்கும் ஷரீஆ படித்த ஒரு ஆலிம் ஒருவர் ஷேக்கா. ச்சே. அவரை மிஞ்சிய ஆளுண்டா? என தவறே செய்யாதவர் போல நினைப்பதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு.

இரண்டாமவரின் பார்வை மிகப் பெரும் ஆபத்தாகும். இதுவே தமிழ் அறிஞரான பீ.ஜே. பக்தர்கள் வழிகெட்டுப் போகக் காரணமானது.

அதே காரணம் அரபி அறிஞர்களை.முன்னுதாரணமாகக் கொளாவோரிடமும் உண்டு.

ஷேக் கர்ளாவி அவர்கள் சிறந்தொரு அறிஞர். அவர்கள் எழுதிய
الحلال والحرام
என்ற பெறுமதியான நூலின் ஹதீஸ்களை நவீன கால ஹதீஸ்கலை அறிஞர் என போற்றப்படும் ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் அதில் இடம் பெற்ற ஹதீஸ்களை ஸஹீஹ்- ளயீஃப் எனத் தரப் பகுப்பாய்வு செய்து
تخريج أحاديث الحلال والحرام
என்ற நூலை வெளியிட்டார்கள். இதே அல்பானி (ரஹ்) அவர்கள் ஷேக் முஹம்மத் கஸ்ஸாலியின்
فقه السيرة
என்ற நூலில் இடம் பெறும் ஹதீஸ்களை தரப்படுத்தி
تخريج أحاديث فقه السيرة
என்ற நூலை வெளியிட்டார்கள்.

இது ஷேக் கர்ளாவி மற்றும் கஸ்ஸாலி (ரஹ்) போன்றோரின் முயற்சிக்கு மதிப்பளித்தல் என்ற ஒரு ஆலிமின் நடுநிலைப் பார்வையாகும்.
நடுநிலை வாதம் பேசும் இது நம்மவரிடம் இல்லாதொழிக்கப்ட்ட ஒரு நடுநிலை என்பது ஒரு புறம் இருக்க, ஷேக் கர்ளாவி, மற்றும் முஹம்மது அல்கஸ்ஸாலி ஆகியோர் ஹதீஸ் துறையில் வல்லுனர்கள் கிடையாது என்பதே இதன் அர்த்தமாகும்.

இவ்வாறு நோக்குகின்ற போது ஷரீஆ சார்ந்து அவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்கள் பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையிலும் இடம் பெறும் என்பதைப் உணர்த்துகின்றது.

எனவே இவர்களின் தீர்ப்புக்களை சுனன் கிரந்தங்களின் ஹதீஸ்களை பகுப்பாய்வு செய்வது போன்று பகுப்பாய்வின்றி உறுதி செய்யாமல்
மக்கள் மன்றில் முன்வைப்பது ஒருவரின் தக்லீத் கண்மூடித்தனமான பின்பற்றலேயே காட்டும்.

ஏனெனில் இரண்டாம் நிலையில் பார்க்கப்பட வேண்டிய ஒரு அறிஞரின் கருத்தை உறுதி செய்யப்பட்ட வஹிபோன்று பாடம் சொல்லிக் கொடுப்பது இயக்க வெறிபிடித்த மூளையில் ஏற்படும் தக்லீத் பாரிசவாதமாகும்.

அதனைக் குணப்படுத்த ஒருவர் சார்ந்திருக்கும் அறிஞரின் கருத்துகளுக்கு மாற்றமாக கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதா? என்றும் சிந்திக்க அறிவு வேண்டும்.

இல்லாத போது தக்லீத் நோய் முத்தும் . இதுவே இன்றைய இயக்க வெறிகளின் பின்னால் காணப்படுகின்ற ரகசியமாகும்.

ஒரு குறிப்பு:

ஷேக் அல்பானி யார்? ஷேக் கர்ளாவியின் அறிவை மதித்து நூல் எழுதியவர். அப்படித்தானே? அவர்களிடம் ஷேக் கர்ளாவி பற்றி கேட்கப்பட்ட போது
شيخ قرضاوي؟ نعم! أقرضه قرضا.
ஷேக் கர்ளாவியா? அவரை ஒரே நறுக்காக நறுக்கி விடு என்றார்கள்.
فتاوى الألباني/ يوتيوب

எனவே ஷேக் கர்ளாவி அல்ல , அல்பானியும்தான் அனைவரும் மனிதர்களே!

ஆனால் எம்மை விட பன்மடங்கு சிறந்த அறிஞர்கள்தான். அதற்காக அவர்கள் சொல்வது இஜ்மாவுடைய நிலையில் பார்க்கப்படுவது போன்ற பிரச்சாரம் ஆபத்தானது.

ஏனெனில் முஸ்லிம் உலகில்

١) القرضاوي في الميزان. المؤلف : سليمان بن صالح الخراشي.

٢) كتاب : ” إسكات الكلب العاوي يوسف بن عبدالله القرضاوي ” . للشيخ مقبل بن هادي الوادعي رحمه .

٣) الفيض الكاوي في كشف ضلالات يوسف القرضاوي.

٤) القرضاوي في العراء.
تنبيه المسلمين من ضلالات يوسف القرضاوي

போன்ற ஷேக் கர்ளாவியைத் தாறுமாறாக விமர்சனம் செய்த நூல்கள் வலம் வருவது போன்று
ஷேக் முஹம்மது கஸ்ஸாலி அவர்களின்
كيف نتعامل مع السنة النبوية
என்ற நூலுக்கு பல மறுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில்

١) الرد على محمد الغزالي وبيان منهجه المنحرف .
الشيخ: محمد ناصر الدين الألباني رحمه الله

٢) طليعة سمط اللآلي في الرد على الشيخ محمد الغزالي
 المؤلف: أبو إسحاق الحويني

என்ற மறுப்பு நூல்கள் பிரபல்யமானது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் தம்பிகளே!

காய்த்த மரமே கல்லடிபடும் என மிக எளிதாக சொல்லி வரட்டு தக்லீதுகளை நியாயப்படுத்தாது இந்த மறுப்புக்கள் நியாயமானதா? இல்லையா? என்றும் நாம் சிந்திக்க தவறும் பட்சத்தில் முரட்டு கப்ருவணங்கிகள் , மத்ஹபு பிடிவாதம் பிடித்தவர்கள், பீ.ஜே. வணங்கிகள் தொடரில் நவீன கர்ளாவி மற்றும் முஹம்மது கஸ்ஸாலி வணங்கிகள் என்ற பெயர் நமக்கு உரித்தாகிவிடும்

இதனால் தான் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்

إذا صح الحديث فهو مذهبي

ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்றார்கள்.

அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு. இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

நடுநிலை என்பது குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த தீர்ப்பும் போக்குமாகும்.

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...